கொள்ளைக் கைதியை திருமணம் செய்து இளம்பெண் அதிரடி... சிறைக்குள்ளே குடும்பம் நடத்தும் இளம் தம்பதி..!
சிறைவாசம் அனுபவித்து வரும் கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறைவாசம் அனுபவித்து வரும் கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பீனிக்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த நபர் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்றபோதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து அவரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நினா முதன்முறையாக தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு பார்க்கிங்கில் சந்தித்துள்ளார்.
சில வாரங்களிலேயே ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகி சிறை சென்று விட்டார். கொள்ளைக் கூட்டத்தில் 17 வயது சிறுவன் என்ற அடைமொழியோடு அமெரிக்க பத்திரிகைகளில் புகைப்படத்துடன் மைக்கேல் தொடர்பான செய்திகள் வெளியாகின. வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
மைக்கேலை காதலித்த நினா அவர் சிறை செல்வதற்கு முன்பே தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன் என உறுதி அளித்துவிட்டார். முதல் 6 ஆண்டுகள் இவர்களுக்கு இடையேயான காதல் கடிதம் மூலம் மட்டுமே வளர்ந்துள்ளது. மைக்கேல் மீது நினாவுக்கு இன்னும் காதல் அதிகமானது. 2012 -ம் ஆண்டு சிறையில் இருவரும் சந்தித்தனர். அதன்பின் சந்திப்புகள் அடிக்கடி நடந்துவந்தது. தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். அவரது தாய் மற்றும் நெருங்கிய தோழி இருவருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.
மைக்கேல் தனது திருமண விருப்பத்தை தெரிவித்துள்ளார். நினாவும் சம்மதித்தார். 6 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியர் மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்காக சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது.
மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார். இது மைக்கேலுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதன்பின்னரும் நினா சிறையில் நடக்கும் தங்கள் சந்திப்புகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார். நினாவுக்குத் தற்போது 29 வயதாகிறது. சிறையில் இருக்கும் மைக்கேலுக்கு 30 வயதாகிறது.