அறிகுறியே இல்லாமல் 1300 பேருக்கு கொரோனா.... மீண்டும் பீதியை கிளப்பும் சீனா...!
இந்நிலையில் சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் வுனான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதலில் இந்த வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய போது, 81 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டனர். 3 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். 76 ஆயிரத்து 238 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: சீன அதிபரின் முகத்திரையை கிழித்த ட்ரம்ப்... கொரோனா பலி எண்ணிக்கையில் தில்லுமுல்லு...?
இரண்டாம் உலக போருக்கு அடுத்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள சீனா, தற்போது தான் அதிலிருந்து மீண்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவால் திக்குமுக்காடும் அமெரிக்கா... ஒரேநாளில் 1000 பேர் பலி...!
காய்ச்சல், இருமல், தொண்டை வலி என ஏகப்பட்ட அறிகுறிகள் கொரோனா தொற்றை கண்டுபிடிக்க உதவி வந்த நிலையில், சீனாவில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்த 205 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.