அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டேன்... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புடின்.
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என மேற்கத்திய நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் அமெரிக்கா ரஷ்யா இடையே வல்லரசு போட்டி இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஓராண்டு காலமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது, போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எச்சரித்து வருகின்றன. ஆனால் ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்: pm narendra modi:ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி சொன்னது கரெக்ட்தான்! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டு
இந்நிலையில் ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டில் தொலைக்காட்சியில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- ரஷ்யாவை பாதுகாப்பதற்காக அனைத்தையும் செய்வேன், அனைத்தையும் பயன்படுத்துவேன், ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வருவதால் ரஷ்ய ராணுவ வீரர்களை உடனடியாக அணிதிரட்ட உள்ளோம், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது, வெறும் வாய் ஜாலம் என்று எண்ண வேண்டாம். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுபடுத்து முயற்சிக்கின்றன.
இதையும் படியுங்கள்: narendra modi: : பிரதமர் மோடிக்கு அமெரிக்கா பாராட்டு!ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் பற்றிய பேச்சுக்கு புகழாரம்
ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன, 1991இல் ரஷ்யாவை துண்டாடியதுபோல ரஷ்யாவை துண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என பேசுகின்றனர். உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஆலோசனையை கேட்டு வருகிறது. அந்நியர்கள் மற்றும் கூலிப்படைகள் மற்றும் நோட்டோ பயிற்சி பெற்றவர்களை அழைத்து வருகிறது. ரஷ்ய வீரர்கள் இன்று ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நாட்டிற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் ரஷ்யா ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளில் எந்திரங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் எல்லை மீறி செயல்பட்டு வருகின்றன, ஆனால் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், ரஷ்யாவிடம் எல்லாவிதமான ஆயுதங்களும் உள்ளன, நோட்டோ படைகள் வைத்திருக்கும் ஆயுதங்களைக் காட்டிலும் நவீனமயமானவை. ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நாட்டையும் மக்களையும் காப்பாற்ற அணு ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்தும். ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டன்பாஸ் பிராந்தியத்தை உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்பதே இந்த போரின் நோக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.