கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்..!! படுக்கையிலேயை சுட்டுத்தள்ளிய கணவன்...!!
இத்தனை நாடுகள் ஒழுக்கமுடன் வாழ்ந்து வந்த மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டாளே என்ற ஆத்திரத்தில் இருந்த அல்போன்சா தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை அதே இடத்தில் வைத்து சுட்டுத் தள்ளினார் .
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனைவியை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த உலகில் எத்தனையோ சட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும் சட்டத்திற்குப் புறம்பான நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது . கணவன் மனைவியை ஏமாற்றுவது மனைவி கணவனை ஏமாற்றுவது தற்போது எல்லா நாடுகளிலும் சகஜமாகிவிட்டது . அப்படி பட்ட ஒரு சம்பவம் மெக்சிகோ நாட்டில் நடந்துள்ளது.
மெக்சிகோவின் தெஹ்வான்டெப்பெக் நகரத்தில் ஒஸ்மாரா மார்டினெஸ் தனது கணவர் அல்போன்சாவுடன் வசித்து வருகிறார் இத்தம்பதியருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அழகான பெண் குழந்தையும் இத்தம்பதிகளுக்கு உள்ளது . இந்நிலையில் பணி நிமித்தமாக கணவர் வெளியூர் சென்று விட்டார் பின்னர் சில தினங்களில் எதிர்பாராத விதமாக வீடு திரும்பினார் அவர், அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார் அதை அல்போன்சா நேரில் பாருத்துவிட்டார். ஒரு நிமிடம் அவருக்கு தலையே சுற்றிவிட்டது. இத்தனை நாடுகள் ஒழுக்கமுடன் வாழ்ந்து வந்த மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டாளே என்ற ஆத்திரத்தில் இருந்த அல்போன்சா தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை அதே இடத்தில் வைத்து சுட்டுத் தள்ளினார் .
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின்ர் ஓடிவந்தனர். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த ஒஸ்மாவை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஒஸ்மா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் . மனைவியை கொலை செய்துவிட்டோமே என்ற ஆதங்கத்தில் இருந்த கணவர் அல்போன்சா தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கினார், அப்போது அங்குவந்த போலீசார் அல்போன்சாவை உயிருடன் காப்பாற்றி அவரை கைது செய்தனர்.