Asianet News TamilAsianet News Tamil

Corona Alert:ஒமைக்ரானுடன் கொரோனா முடிகிறது..? அலட்சியம் வேண்டாம்.. எச்சரிக்கும் WHO..

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விஷயத்தில், நாம் அனைவரும் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம் என்றும் ஒமைக்ரான் திரிபுடன் கொரோனா பரவல் ஓய்ந்துவிடும் என்று கணிப்பது மிகுந்த ஆபத்தானது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
 

WHO statement corona virus
Author
WHO, First Published Jan 24, 2022, 8:20 PM IST

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதேனோம் தலமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்“கொரோனா பெருந்தொற்று நோயானது, தனது மூன்றாவது ஆண்டுக்குள் நுழைந்துள்ளது.இதுபோன்ற நேரத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர உழைக்க வேண்டும். அதேபோல கொரோனா தொடர்பான பீதியும் புறக்கணிப்புக்கும் இடையே நாமெல்லாம் தள்ளாடும் நிலையும் இனியும் தொடரக்கூடாது. கொரோனாவை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் நம்மிடையே உள்ளன. ஆகவே கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விஷயத்தில், நாம் அனைவரும் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். அதனால் அலட்சியம் வேண்டாம்.

அதுமட்டுமன்றி, அதிக பரவும் தன்மை கொண்டு இருக்கும் ஒமைக்ரான் திரிபு கொரோனாதான் அனைத்திலும் கடைசி கொரோனா திரிபாக இருக்குமென நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தால், அதுவே ஆபத்துக்கு வழிவகுக்கும். ஆகவே இந்த கொரோனா பெருந்தொற்றின் இறுதி ஆட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோமென நினைப்பது தவறு. கடந்த 9 வாரங்களுக்கு முன்னர்தான் ஒமைக்ரான் திரிபு உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த குறுகிய காலத்துக்குள் கிட்டத்தட்ட 80 மில்லியன் புதிய கொரோனா தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார்கள். 80 மில்லியன் என்பது, 2020-ம் ஆண்டு பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்துவது மற்றும் தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பது போன்றவற்றை அனைத்து நாடுகளும் சரியாக முயன்றால், நம்மால் இந்த இக்கட்டான நிலையை கடக்க முடியும் என டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.இன்னும் புதிது புதிதாக பல கொரோனா திரிபுகள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இப்போதே பி.1.640.2 என்ற புதிய திரிபு பரவத்தொடங்கிவிட்டது. இது 46 பிறழ்வுகளை கொண்டது. 46 என்பது, ஒமைக்ரானை விட அதிக பிறழ்வென்று பொருள். இந்த திரிபு, தற்போதுவரை மத்திய பிரதேசத்தில் சுமார் 21 பேருக்கு உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios