உலகையே அதிரவைத்த ஒற்றை செய்தி..... 22 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதி...!
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கிறது. இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 மக்கள் உயிரழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 17 லட்சத்து 74 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக கஷ்டத்தை அனுபவித்த சீனா மக்கள் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் சீனாவை கடந்து இத்தாலி, அமெரிக்கா, ஈரான், குவைத், பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. இந்த கொடூர தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன.
கொரோனா என்ற கொடிய அரக்கனிடம் இருந்து மக்களை காப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சரியான தூக்கம், உணவு இன்றி, தங்களது குடும்பத்தினரை கூட பார்க்க முடியாமல் சேவையாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தனி மனித விலகல் ஒன்றே சரியான வழி என்றாலும், அது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொருந்தாது.
24 மணி நேரமும் தன் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. முகக்கவசங்கள், கொரோனா பாதுகாப்பு உடை என அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொற்று மருத்துவர்கள், செவிலியர்களை பாதித்து வருகிறது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா... ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... வைரலாகும் போட்டோ...!
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி மக்களின் உயிரை காப்பதற்காக தன் உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இந்த நிலையா? என்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.