சுனிதா விஸ்வநாத் யார்? அமெரிக்காவில் ராகுல் காந்தியை சந்தித்த பின் சர்ச்சையில் சிக்கியது ஏன்?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள் மனித உரிமை ஆர்வலர் சுனிதா விஸ்வநாத், சமீபத்தில் அந்நாட்டுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.

Who Is Sunita Viswanath And What is The Controversy Surrounding Her Meeting With Rahul Gandhi In US?

இந்திய வம்சாவளி அமெரிக்கரும் பெண்கள் நலன் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலருமான சுனிதா விஸ்வநாத், சமீபத்தில் அந்நாட்டுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இவர் கோடீஸ்வர முதலீட்டாளரும், மோடி அரசின் தீவிர விமர்சகருமான ஜார்ஜ் சொரோஸுக்கும் நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

சுனிதா விஸ்வநாத் சர்ச்சையில் சிக்கியது எப்படி?

புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி, அமெரிக்காவில் ராகுல் காந்தி சுனிதா விஸ்வநாத்தை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினார். சுனிதா விஸ்வநாத், கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சொரஸுக்குச் சொந்தமான அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

பிரபஞ்சத்தின் இடைவிடாத ஓசை: ஐஐடி ரூர்க்கி ஆய்வாளர்கள் பங்களிப்பு!

Who Is Sunita Viswanath And What is The Controversy Surrounding Her Meeting With Rahul Gandhi In US?

பிரதமர் மோடியைக் குறித்து பாஜக அரசு குறித்தும் விமர்சித்துவரும் ஜார்ஜ் சோரோஸிடம் இருந்து நிதியுதவி பெறும் அமைப்பை நடத்தும் சுனிதாவுடன் ராகுல் காந்திக்கு என்ன தொடர்பு என்று அமைச்சர் இரானி சந்தேகக்கிறார். ராகுல் காந்தியும் சுனிதா விஸ்வநாத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் காட்டி ஸ்மிருதி இரானி தன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ராகுல் காந்தியின் நியூயார்க் பயணம் ஜமாத்-இ-இஸ்லாமுடன் தொடர்புடைய வட அமெரிக்க இஸ்லாமிய வட்டத்தின் (ICNA) இயக்குநர் தன்சீம் அன்சாரியால் ஒருங்கிணைக்கப்பட்டது என்றும் ஸ்மிருதி இரானி கூறினார். "கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்ராவின்போது, ஜார்ஜ் சோரோஸ் நிதியுதவியுடன் செயல்படும் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் வந்திருந்தார்” என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மே 31ஆம் தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்று சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி, நியூயார்க் ஆகிய மூன்று நகரங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த அமெரிக்கப் பயணத்தில் அவர்  சுனிதா விஸ்வநாத், தன்சீம் அன்சாரி போன்ற நபர்களை சந்தித்ததால் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடக்கும்: சரத் பவார் அறிவிப்பு

Who Is Sunita Viswanath And What is The Controversy Surrounding Her Meeting With Rahul Gandhi In US?

கர்நாடகாவில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியையின் அமெரிக்கப் பயணம் பற்றி விமர்சித்துள்ளார். சமூக ஊடகங்களில் ராகுல் காந்தியை கேலி செய்யும் வீடியோவைப் பகிர்வதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் பாபு அளித்த புகாரின் அடிப்படையில் மாளவியா மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சுனிதா - ராகுல் சந்திப்பை முன்வைத்து காந்தி குடும்பத்தினரைச் சாடிய ஸ்மிருதி இரானி, "அதிகாரம் கிடைத்த பிறகு உண்மையை மறைக்க முடியும் என்பதை காந்தி குடும்பத்தினர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்" என்று கூறினார்.

சுனிதா விஸ்வநாத் யார்?

பெண்கள் நலன் மற்றும் மனித உரிமை ஆர்வலரான சுனிதா விஸ்வநாத் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஆவார். ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான அவரது நிறுவனம் நிதி திரட்டியபோது, ஜார்ஜ் சொரோஸிடம் இருந்து நிதியுதவி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

வேறு சாதி பையனை காதலித்த மகளைக் கொன்ற தந்தை! மனமுடைந்து ரயிலில் பாய்ந்த காதலன்!

Who Is Sunita Viswanath And What is The Controversy Surrounding Her Meeting With Rahul Gandhi In US?

சென்னையில் பிறந்த இவர், சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். 2001ஆம் ஆண்டில், ஆப்கானிய பெண்களுக்கான (WAW) தொண்டு நிறுவனத்தை நிறுவினார். 2011ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'சாதனா' என்ற சாதி மற்றும் இனவெறிக்கு எதிரான முற்போக்கு இந்துக்கள் அமைப்பின் இணை நிறுவனராகவும் இருக்கிறார்.

2015ஆம் ஆண்டில், சாதனா அமைப்பின் பணிகளுக்காக வெள்ளை மாளிகையால் கௌரவிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, வட அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஹிந்துஸ் ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் (HfHR) என்ற நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர்.

மே 2021 இல், இந்து அமெரிக்கன் அறக்கட்டளை தாக்கல் செய்த அவதூறு வழக்கில் விஸ்வநாத் பெயர் இடம்பெற்றது. 2022 இல் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2011இல் சுனிதாவுக்கு உலகளாவிய மகளிர் உரிமைகள் விருது வழங்கப்பட்டது.

டக்ளஸ் கல்லூரி மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், எஸ்.என்.டி.டி (SNDT) மகளிர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். சுனிதா விஸ்வநாத் முதலில் எழுத்தாளர் சுகேது மேத்தாவை மணந்தார். பின், அவருடனான உறவு முறிந்தததால், ஸ்டீபன் ஷாவை திருமணம் செய்துகொண்டார்.

முட்டாள்தனமான கேள்வி... நான் என்ன காமெடியானா? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios