Who is rishi Sunak: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் ரிஷி சுனக் யார்? வீடியோ வெளியிட்டு பரபரப்பு!!
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவழியும், அந்த நாட்டின் நிதியமைச்சராக இருந்து சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக ரிஷி சுனக் தயாராகி வருகிறார். வீடியோ வெளியிட்டு பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவழியும், அந்த நாட்டின் நிதியமைச்சராக இருந்து சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்கிற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக ரிஷி சுனக் தயாராகி வருகிறார். இதற்கான பிரச்சாரத்தை அவர் துவக்கியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முக்கியமாக துணை கொறடா கிரிஸ் பின்ஷர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவரை அரசு பதிவில் அமர்த்தியது. அவருக்கு ஆதரவாக பேசியது என சிக்கல் உருவானது. போரிஸ் ஜான்சநின் இந்த நடவடிக்கையை கண்டித்து நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சஜித் ஜாவெத் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் ராஜினாமா செய்தனர். இக்கட்டான சூழலில் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார்.
கொரோனா கால கட்டத்தில் நன்றாக பணியாற்றியவர் என்ற பெயர் ரிஷி சுனக்கிற்கு உள்ளது. அப்போது இருந்த நிதி நெருக்கடியை, மக்களின் நிதி மேலாண்மையை திறம்பட கையாண்டு இருந்தார். தற்போது இருக்கும் நிலையில் இவர் அல்லது சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவெத் அடுத்த பிரதமர் ஆகலாம் என்று பேசப்படுகிறது. இதற்கான பிரச்சாரத்தை தற்போது ரிஷி துவக்கி விட்டார்.
வீடியோ ரிலீஸ்
இதை முன்னெடுக்கும் வகையில் அவரே பேசி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், ''யாரோ இந்த கடினமான தருணத்தை கையில் எடுத்துக் கொண்டு நிலைமையை சரி செய்ய வேண்டும். அதனால்தான் நான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் நிற்க இருக்கிறேன். என்னுடைய பாட்டி தனது இளம் வயதில் நம்பிக்கையுடன் இங்கிலாந்து நாட்டுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
இங்கு வந்த பின்னர் எப்படியோ வேலையில் சேர்ந்தார். ஆனால், கடினமான கஷ்டங்களுக்குப் பின்னர் ஓராண்டாக பணம் சம்பாதித்து தனது கணவர் மற்றும் குழந்தைகளை இங்கிலாந்து நாட்டுக்கு அழைத்துக் கொண்டார்'' என்று பேசி இருந்தார்.
ரிஷி சுனக் பூர்வீகம்
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரது தாத்தா பாட்டி ஆப்ரிக்காவில் வசித்து வந்தனர். அங்கு இந்தியர்களுக்கு எதிர்ப்பு கிளம்ப அங்கிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர். இங்கிலாந்தில் பிறந்தவர் ரிஷி சுனக்.
பிரதமர் ஆகும் வாய்ப்புடன் தனது பிரச்சாரத்தை தற்போது ரிஷி சுனக் துவங்கி விட்டார். அவரே பேசி நேற்று டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Conservative Party: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியான ரிஷி சுனக்?
ரிஷி சுனக் மனைவி
இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண சாமியின் மருமகன்தான் ரிஷி சுனக். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா. இவர் இங்கிலாந்தில் படித்துக் கொண்டு இருக்கும்போது, ரிஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
முதல் இந்திய பிரதமர்
இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் வெற்றி பெற்று விட்டால் முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அந்த நாட்டின் உயர் பதவியில் அமரும் பெருமையை பெறுவார். ஒரு காலத்தில் நம்மை அடிமைப்படுத்திய நாட்டின் பிரதமராக இந்தியர் ஒருவர் அமருவது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.