Asianet News TamilAsianet News Tamil

கெட்ட எண்ணம் கொண்ட ட்ரம்பை குத்தி கிழித்த டெட்ரோஸ்.!! ஒற்றை டுவிட்டரில் உலகத்தின் கவனம் ஈர்த்த WHO இயக்குனர்

உலகில் மிக வறிய மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியத்தை அனைவரும் ஒன்றிணைந்து மேம்படுத்த வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் அழைப்பு விடுத்துள்ளா ,
WHO director general tedrose athanaome twit regarding corona and unite for world
Author
Delhi, First Published Apr 16, 2020, 2:41 PM IST
உலகில் மிக வறிய மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியத்தை அனைவரும் ஒன்றிணைந்து மேம்படுத்த வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதானோம் அழைப்பு விடுத்துள்ளா , அன்பு ,  ஒற்றுமை ,  இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என அவர் கூறியுள்ளார் .  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக சுகாதர நிறுவனத்திற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்த  நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 1லட்த்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இந் நிலையில் கொரோனா வைரசால் உலகம் சந்தித்து வரும் இப் பெரும் துயரத்திற்கு சீனாதான் காரணமென அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது , 
WHO director general tedrose athanaome twit regarding corona and unite for world

கொரோனா வைரசை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உலகிற்கு அறிவிக்க உலகச் சுகாதார நிறுவனம் தவறிவிட்டது எனக்கூறி அந்நிறுவனத்திற்கு வழங்கிவந்த நிதியை அமெரிக்க அதிபர்  நிறுத்தியுள்ளார் .  இது உலக அளவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,  இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் வைரஸ் தொடர்பாக உலகில் நடந்துவரும் நிகழ்வுகள் குறித்தும் வெறுப்பி பிரச்சாரங்கள் குறித்தும்  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் , உலகில்  வைரஸ் ஒருபக்கம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ,  இந்த வைரஸ் மனிதர்களிடையே மிகப்பெரிய வெறுப்பு உணர்வை உண்டாக்கி இருக்கிறது , கொரோனாவை வைத்து அரசியல் செய்யப்படுகிறது ,  கொரோனாவை வைத்து  வெறுப்புணர்ச்சி பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது,  இந்தியர்கள்  சீனர்களை சமூக வலைத்தளத்தில்  இழிவான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.  

WHO director general tedrose athanaome twit regarding corona and unite for world

இந்தியாவின் வடக்கு பகுதியில்  பெண்ணை கொரோனா கொரோனா என கூச்சலிட்டபடியே விரட்டபடுகிறார்.  ஒரு பெண் வீடுகளில் எச்சிலை உமிழ்ந்து செல்கிறார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  சீன வைரஸ் என குறிப்பிட்டு அதை உலகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார் ,  அனைவருக்கும் வெறுப்பும் இனவெறியும் மட்டுமே உள்ளது .  முஸ்லிம்கள் கொரோனா வெறுப்பு  பிரச்சாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனாவின்  எதிர்ப்பு முகமாக உள்ள உலகச் சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக  கூறி சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்க அதிபர் நிறுத்தி இருக்கிறார் ,  நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் ,  WHO இதுவரையில் எந்த பாகுபாடும் காட்டவில்லை ,  ஏழை , பணக்காரன் அல்லது பெரிய நாடுகள் ,  சிறிய நாடுகள் தேசியங்கள் ,  இனங்கள் என எந்த சித்தாந்தமும் உலக சுகாதார நிறுவனத்திற்கு இல்லை .  ஆகவே இந்நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பொது எதிரியான கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது மட்டுமே இந்த வைரசில்  இருந்து உலகம் தப்பிக்க ஒரே வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். 
WHO director general tedrose athanaome twit regarding corona and unite for world
அன்பு.. ஒற்றுமை... ஒற்றுமை... இது மட்டுமே மனிதகுலத்தை பாதுகாக்கும் என டெட்ரோஸ் அதானோம்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், இது  சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது, ட்விட்டரில்  அவரது கருத்துக்கு ஏராளமானோர் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .  உலகச் சுகாதார  நிறுவனத்திற்கு நிதி நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டுமென பலர் உலக நாடுகள் மற்றும் தலைவர்கள் பிரலங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ,  டெட்ரோஸ் அதானோமின் கருத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.  
 
Follow Us:
Download App:
  • android
  • ios