சிங்கப்பூரில் பழைய விரைவு ரயில் ஒன்றில் திடீரென கிளம்பிய வெண்புகை! பயணிகள் வெளியேற்றம்
சிங்கப்பூரில் பழமையான MRD ரயில் ஒன்றில் திடீரென வெண்புகை கிளம்பியதால், பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சிங்கப்பூரில், கடந்த வியாழக்கிழமை கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலுக்குள் (எம்ஆர்டி) திடீரென வெண்புகை மண்டலம் சூழ்ந்தது. அதைத்தொடர்ந்து, அந்த ரயிலில் இருந்த பயணிகள் சிட்டி ஹால் (City Hall) நிலையத்தில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரயிலின் குளிரூட்டி (AC Machine) இயந்திரத்திலிருந்து ஏற்பட்ட குளிர்காற்று வாயு கசிவால் இந்த வெண்புகை உருவானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த ரயில் கடந்த 1987ம் ஆண்டில் இருந்து இயங்கிக்கொண்டிருக்கும் முதன்முதலில் வெளியிடப்பட்ட விரைவு ரயில்களில் ஒன்று என MRD Trains தலைவர் லாம் ஷியாவ் காய் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 9.50 மணிக்கு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான ரயில், சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து லாம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் அருகில் இருந்து ரயில் நிலையத்தில் வெளியேற்றப்பட்டதாகவும், அடுத்த ரயிலில் ஏறிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் லாம் கூறினார்.
கேக் சாப்பிட ஆசைப்பட்டது ஒரு குத்தமா? கைவரிசையை காட்டிய Hackers - மொத்தமா அபேஸ் பண்ணது எத்தனை கோடி தெரியுமா?
இந்த சம்பவத்தில், எந்த பயணிக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்டதாக தகவல்கள் இல்லை, சம்பவத்துக்குப் பிறகு மற்ற ரயில் சேவைகள் இயல்பாகத் தொடர்ந்ததாகவும் லாம் தெரிவித்தார்.