பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய அன்று இரவு, வீரர்களின் பத்திரமாக திரும்பு வரும்வரை தூங்காமல் கண் விழித்துகாத்திருந்ததாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏழு நாள் அமெரிக்கப் பயணத்தை  முடித்துக்கொண்டு நேற்றிரவு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.  டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு பாஜக தொண்டர்களும் நாட்டு மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த மக்கள்,  பிரதமர் வாழ்க... மோடி வாழ்க... என்று முழக்கமிட்ட அவர்கள் மோடிக்கு உற்சாகமாக கையசைத்து வரவேற்றனர்.  முன்னதாக பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்.  ஐநாவில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்றார்.  அதற்குக் காரணம் நம்நாட்டில் வளமும் இந்தியர்களின் கடின உழைப்புமே என்றார்.  பலநாடுகள் எட்டிப்பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் உயரத்தை இந்தியா தன் கடின முயச்சியாலும், அயராத உழைப்பினாலும் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

எப்போதும் இல்லாத அளவிற்கு ஐநாவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றார், நாட்டின் பாதுகாப்பை பொருத்தவரையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத இந்தியாவின் அணுகுமுறை மற்ற நாடுகளை வியக்க வைக்கிறது என்றார்.  நம் நாட்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி இன்றுடன் மூன்றாண்டுகள்  நிறைவுபெறுவதாக அதை நினைவு கூர்ந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்த அன்று இரவு இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்தபோது, மீண்டும் அவர்களிடமிருந்து எப்போது தொலைபேசி அழைப்பு வரும் என்று அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்துதாகவும் அவர் தெரிவித்தார்.  நான் எதிர்பார்த்தபடியே ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக முடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தனர் நம் வீரர்கள் பத்திரமாக நாடு திரும்பிய பிறகே உறங்கச் சென்றதாகவும் மோடி நெகிழ்ச்சியாக தெரிவித்தார். அவரின் உரை பாஜக தொண்டர்களை சிலிர்ப்பூட்டும் வகையில் இருந்தது