Asianet News TamilAsianet News Tamil

ஈரானை அடக்கி ஒடுக்கிவிட்டேன்...!! தலைகணத்தில் கொக்கரித்த ட்ரம்ப்...!! அவையில் அவமானப்படுத்திய பெண்...!!

ஈரான்  குறித்து பேசிய டிரம்ப் , ஈரான்  மரணத்தையும் அழிவையும் பரப்பி வருகிறது ,  வலுவான பொருளாதார தடையினால் ஈரானை ஒடுக்கியுள்ளேன் , ஆனாலும் தலைக்கணம் மற்றும் முட்டாள்தனத்தின் காரணமாக  தன்னிடம்  உதவி கேட்க ஈரான் மறுக்கிறது என தெரிவித்தார் .

when american senate speaker criticized trump,  for president  talk about iron and isis
Author
Delhi, First Published Feb 5, 2020, 4:30 PM IST

சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  ஏற்கனவே ட்ரம்ப் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபர் பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை செனட் சபையில்  நடைபெற்று வருகிறது . இந்நிலையில்  அவரது உரை நகலை சபாநாயகர் கிழித்தெறிந்துள்ளார்.   தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற யூனியன் கூட்டத்தில் மூன்றாவது முறையாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார் . 

when american senate speaker criticized trump,  for president  talk about iron and isis

அதில் பேசிய அவர்,   ஈரானையும் , ஈராக்கையும் வசப்படுத்தி வைத்திருந்த ஐஎஸ் காட்டுமிராண்டிகளை தான் துடைத்தெறிந்து விட்டதாக பெருமிதம் தெரிவித்தார் அத்துடன் அமெரிக்காவில் தற்போது வறுமை ஒழிந்து  குற்றங்கள் குறைந்து வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஒழிக்கப்பட்டுள்ளது என கூறினார் .  இந்நிலையில் ஈரான்  குறித்து பேசிய டிரம்ப் , ஈரான்  மரணத்தையும் அழிவையும் பரப்பி வருகிறது , வலுவான பொருளாதார தடையினால் ஈரானை ஒடுக்கியுள்ளேன் , ஆனாலும் தலைக்கணம் மற்றும் முட்டாள்தனத்தின் காரணமாக  தன்னிடம் உதவி கேட்க ஈரான் மறுக்கிறது என தெரிவித்தார் . 

when american senate speaker criticized trump,  for president  talk about iron and isis

அத்துடன் அணு ஆயுதங்களையும் ஈரான் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார் .  அப்போது அவருக்குப் பின்னால் இருந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நன்ஸி பெலோசி அதிபர் ட்ரம்பின்  உரை நகலைக் கிழித்து எறிந்தார் .  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ,ஆனால் ட்ரம்ப் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை ,  ஏற்கனவே இருக்கும் நான்சிக்கும் ட்ரம்புக்கும் இடையே  மோதல் இருந்து வரும் நிலையில் டிரம்புக்கு எதிராக அவர் கொண்டுவந்த பதவி நீக்க தீர்மானமும் தோல்வி அடையும் நிலையில் உள்ளதால் நான்சி இவ்வாறு நடந்து கொண்டதாக அமெரிக்க நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios