8 மணி நேரம் தவியாய் தவித்த பயனாளர்கள்… மன்னிப்பு கோரிய வாட்ஸ் அப்…
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 8 மணி நேரம் திடீரென முடங்கியதற்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மன்னிப்பு கோரி இருக்கிறது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 8 மணி நேரம் திடீரென முடங்கியதற்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மன்னிப்பு கோரி இருக்கிறது.
உலகின் மிக பெரிய சமூக வலைதள ஜாம்பவான்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் இதனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
நேற்றிரவு திடீரென வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் திடீரென முடங்கி என்னவென்று தெரியாமல் பயனாளிகள் ஆளாளுக்கு அவர்களது செல்போன்களையும், இணையதள பிரிவையும் பிரித்து நோண்ட ஆரம்பித்தனர்.
இந்த பிரச்னை தமக்கு மட்டுமல்ல… இதை பயன்படுத்தும் அனைவருக்குமே என்பதே லேட்டாக தான் தெரிய வந்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை உலகம் முழுவதும் முடங்கியது.
ஒருவழியாக இன்று அதிகாலை முதல் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கியதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரி இருக்கிறது.
சேவை வினியோகத்தில் ஏதோ தவறு நடந்திருப்பதால் இதுபோன்று நிகழ்ந்துவிட்டதாகவும், விரைந்து அனைத்தும் சரி செய்யப்படும் என்று உறுதி தெரிவித்து இருந்தது. அதன்படி அதிகாலை அளவில் கோளாறுகள் நிவர்த்தி ஆக பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.