ஆப்கனில் கிளம்பும் முன் அமெரிக்க படை செய்து வைத்த காரியம்... உயிர் பயத்தில் மக்கள் எடுத்த முடிவு..!

தலிபான்கள் அவற்றை பார்வையிட மட்டுமே முடியும், ஆனால் பறக்க வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். 
 

What the US forces did before leaving for Afghanistan ... The decision taken by the people in fear for their lives ..!

காபூலில் செயலிழக்க வைக்கப்பட்ட அமெரிக்க விமானங்களை தலிபான்கள் வீரர்கள் ஆய்வு செய்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறுவதற்கு முன்பாக, அனைத்து அமெரிக்க விமானங்கள், இராணுவ வாகனங்களை செயலிழக்கச் செய்து விட்டு சென்றனர். இந்நிலையில், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை தலிபான்கள் ஆய்வு மேற்கொண்டனர். பென்டகன் அதிகாரிகள், இது குறித்து தெரிவிக்கையில், தலிபான்கள் அவற்றை பார்வையிட மட்டுமே முடியும், ஆனால் பறக்க வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

 What the US forces did before leaving for Afghanistan ... The decision taken by the people in fear for their lives ..!

இந்நிலையில், தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தானின் பாலைவனத்தின் வழியாக ஈரானுக்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பல்லாயிரம் நூற்றாண்டுக்கு முன்பு எகிப்து தேசத்தில் இருந்து இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக நடந்தே காணான் தேசத்தை நோக்கி புறப்பட்டார்கள் என கிறிஸ்துவர்களின் அடையாளமாக கூறப்படும் பைபிளில் கூறப்பட்டுள்ளது. What the US forces did before leaving for Afghanistan ... The decision taken by the people in fear for their lives ..!
 
அதேபோன்று, ஆப்கானிஸ்தானிஸ் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது நடைபயணத்தை தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு தப்பிச் செல்கின்றனர். இப்படி கால்நடையாக புறப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரம்ப இலக்கு துருக்கியாக இருக்கலாம். பலர் ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்கு வருவார்கள் என நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால், தங்கள் உயிருக்கு பயந்து அந்நாட்டு மக்கள் இப்படி மற்ற நாடுகளுக்கு தங்களது பயணத்தை தொடங்கியிருக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios