காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன..? பரபரக்கும் பாகிஸ்தான்..!

காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன? என்பது தொடர்பாக ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை அவசரமாக கூடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's next in Kashmir?

காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன? என்பது தொடர்பாக ஆலோசிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை அவசரமாக கூடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's next in Kashmir?

மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.  

இந்திய அரசின் நகர்வுக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினையில் பாகிஸ்தானும் ஒரு தரப்பு. இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க தேவையான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.What's next in Kashmir?
 
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது. இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெற்றோ, பாகிஸ்தானின் ஒப்புதலை பெற்றோ மேற்கொள்ளப்படவில்லை.What's next in Kashmir?

எனவே இது சட்டவிரோதமானது என கூறியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 11.00 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios