வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ,  வடகொரிய ஊடகங்கள் இதுவரை அது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருப்பது கிம் விவகாரத்தில் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது .36 வயதாகும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியில் வடகொரியாவின் ஸ்தாபன தந்தையும் கிம்மின் தாத்தாவான கிம் ஜாங் இல் லின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாதது உலக நாடுகளை வடகொரியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது ,  அந்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வில்  கலந்துகொள்ளாமல் கிம் எங்கே போனார் என சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பத் தொடங்கின.  இந்நிலையில் அமெரிக்கா செய்தி ஊடகங்கள்  கிம் குறித்து சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டன .  அதில் கிம் ஜாங் உன்னுக்கு  ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும்  செய்தி வெளியிட்டன. 

வடகொரியாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் தென் கொரியாவின் என் கே செய்தி நிறுவனம் ,  அமெரிக்க நாட்டு தொலைக்காட்சிகள் கூறுவது போல  எந்த அறிகுறிகளும் வடகொரியாவில் தென்படவில்லை எனவும்,  அது முற்றிலும் தவறான தகவல் எனவும் மறுத்தது .  ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வடகொரிய அதிபர் கிம்முக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ,  அவர் மவுண்ட் கும் காங் ரிசாட்டில் உள்ள  ஒரு வில்லாவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தி வெளியிட்டது.  அதேபோல் வடகொரியாவின் நெருங்கிய நாடான சீனாவும் ஆங்கில தொலைக்காட்சிகளின் தகவல்களை  மறுத்தது.  ஆனால் இப்போதும் கூட வடகொரியா அதிபரின்  உடல்நிலை குறித்து எந்தவித  அதிகாரப்பூர்வ செய்தியையும் வடகொரிய ஊடகங்கள்  வெளியிடவில்லை ( இது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது ) கொரிய ஊடகமான கேசிஎன்ஏ வில் வெளியான தகவலின்படி ,  ஏப்ரல் -11 அன்று " கிம் " ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் , கொரோனா வைரஸ் பற்றி விவாதித்தார் ,  ஆளும் தொழிலாளர் கட்சியின் அரசியல் பணியகத்தின் மாற்று உறுப்பினராக தனது சகோதரியை தேர்ந்தெடுத்தார் . 

சிரியா நாட்டு ஜனாதிபதி பஷர்-அல்-ஆசாத் மற்றும் கியூபா ஜனாதிபதி  மிகுவேல்  தியாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பியதோடு இரண்டு வடகொரிய அதிகாரிகளின் நூற்றாண்டு விழா விருந்தில் கலந்து கொண்டார் என மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . ஆனால்  " கிம் "  உயிர் தொடர்பாக   பல்வேறு  எதிர்மறையான செய்திகள் உலா வருகின்றன இந்நிலையிலும்  வடகொரியா எந்த விதமான பதிலையும் தெரிவிக்காமல் உள்ளது .   ஒரு வேலை " கிம் " க்கு  அசாதாரண  முடிவு ஏற்பட்டால் அது வடகொரியாவில் மிகப்பெரிய உள்நாட்டு கலவரத்தையும் , அங்கு அசாதாரண சூழ்நிலையையும் உருவாக்க வாய்ப்பு உள்ளது எனவும் சர்வதேச அரசியல் நோக்ககர்கள் எச்சரிக்கின்றனர்.  இந்நிலையில்  கிம் ஜாங் இல்லின் 65 வயதான சகோதரரான கிம் பியோங் இல்,   மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் சுட்டிகாட்டுகின்றனர்.  " கிம்"  ஆட்சிக்கு இதுவரை ஒரு வெளிப்படையான வாரிசை அவர் அளிக்கவில்லை. 

இந்நிலையில் அவரது தங்கையும்  ஆளும் கட்சியின் மூத்த அதிகாரியுமான  கிம் யோ ஜாங் அவருடைய இடத்தை நிரப்புவார் என கணிக்கப்படுகிறது.  இருந்தாலும் ஒரு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ளும் அளவுக்கு  ஆற்றல் அவரிடத்தில்  இல்லாமல் போகும் பட்சத்தில் அது வடகொரியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என எச்சரிக்கபடுகிறது.   ஒருவேளை அங்கு கூட்டுத் தலைமையின் கீழ் ஆட்சி வரலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.  சரியான  நியமிக்கப்பட்ட வாரிசு இல்லாததால் குழப்பம் ,  மனித துன்பம் ,  உறுதியற்ற தன்மை வடகொரியாவில் ஏற்படுமென தென்கொரிய ஒய்வுபெற்ற சிறப்பு நடவடிக்கை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுன் இன்-பம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனநாயக பாதுகாப்பு அறக்கட்டளை மூத்த உறுப்பினரும் அமெரிக்க சிறப்பு படையின் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான டேவிட் மேக்ஸ்வெல் ,  அமெரிக்கா தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அசாதாரண சூழ்நிலையை கூர்ந்து கவனிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்

இதுவரைக்கும் கிம்  ஒரு வாரிசை அறிவிக்கவில்லை,  அவரது சகோதரியே இப்போது அந்த இடத்தில் இருக்கிறார்.  அவரின் சமீபத்திய பதவி உயர்வு ,  மற்றும் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து அவரது பெயரில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் அறிக்கைகள் மூலம் அவர் கிம்மின் வாரிசாக நியமிக்க பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகிறது . ஆனால் அவரால் குடும்ப ஆட்சியின் தலைவராக மாற முடியுமா என்பது சந்தேகமே. ஒரு தெளிவான வாரிசு இல்லாதது  ஒரு  ஆட்சியின் சரிவுக்கு வழிவகுக்கும் .  ஒரு அசாதாரண சூழ்நிலையை கையாள அந்நாட்டு ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், நாட்டில்  அதிகாரத்தைக் கைப்பற்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் பட்சத்தில் அது வடகொரியாவில் மோசமான பேரழிவை ஏற்படுத்தும் .  எத்தனை உள்நாட்டு கொந்தளிப்புகள் வந்தாலும்  வடகொரிய ராணுவம் நாட்டை பாதுகாக்க போராடும் என அவர் கணித்துள்ளார் .