இஸ்ரேல்‍-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? அடுத்து என்ன நடக்கும்?

இஸ்ரேல்‍-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? அடுத்து என்ன நடக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக அலசுவோம்.

What are the key features of the Israel-Hamas ceasefire agreement? ray

இஸ்ரேல்‍-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் 

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சுமார் 15 மாதங்களுக்கும் மேலாக நடந்த போர் இப்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கிய நிலையில், காசாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகல் என அனைத்தும் சேதமடைந்து அந்த நகரே மக்கள் வசிக்க முடியாத பாலைவனமாக மாறியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ததன்பேரில் இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். போர் நிறுத்த முடிவை பாலஸ்தீன மக்களும், ஹமாசால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

மூன்று கட்டங்கள் 

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் எப்படி போடப்பட்டுள்ளது? அடுத்து இனி என்ன நடக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இஸ்ரேல்‍ காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது முழுமையான போர் நிறுத்தம், இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து திரும்பப் பெறுதல் மற்றும் பணயக்கைதிகளை விடுவித்தல் ஆகியவை போர் நிறுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்துவார்கள். காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் திரும்ப பெறப்படும். ஹமாஸ் வசமிருக்கும் அமெரிக்கர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். பாலஸ்தீன பொதுமக்கள் மீண்டும் தாங்கள் வசித்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காசாவில் மனிதாபிமான உதவிகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் போருக்கு நிரந்தர முடிவை கொண்டு வரும். இரு தரப்பில் இருக்கும் அனைத்து பயணயக் கைதிகளும் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள். இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள். முழுமையான போர் நிறுத்தம் செய்து இஸ்ரேல் எல்லைகளும், காசாவும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்.

What are the key features of the Israel-Hamas ceasefire agreement? ray

தெளிவாக கூற முடியாது 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் காசாவுக்கான ஒரு பெரிய மறுகட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது இஸ்ரேலின் தாக்குதலில் காசாவின் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்து சீர்குலைந்து கிடக்கும் நிலையில், அங்கு மறுகட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மருத்துவமனைகள், பள்ளி கட்டிடங்கள் மீண்டும் உயிர் பெறும். காசா மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வழங்கி அவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும்.

இப்போது முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை இன்று முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் மற்றும் கடைசி கட்ட போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கும். இன்னும் இரண்டு போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்தை மீதமிருக்கும் நிலையில், போர் நிரந்தரமாக முடிந்து விட்டது என்று இப்போது தெளிவாக கூற முடியாது.

நீடிக்கும் சிக்கல்கள் 

ஏனெனில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகள் மூன்று கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் வரை தாக்குதல்கள் நடத்தாமல் அமைதி காக்க வேண்டும். இஸ்ரேலின் முக்கிய போர் நோக்கங்களில் ஒன்று ஹமாஸின் இராணுவ நிலைகள் மற்றும் அதன் நிர்வாகத் திறன்களை அழிப்பதாகும். இஸ்ரேல் அதை கடுமையாக சேதப்படுத்தியிருந்தாலும், ஹமாஸ் இன்னும் செயல்படவும் மீண்டும் ஒருங்கிணைக்கவும் ஓரளவு திறனைக் கொண்டுள்ளது.

அது மட்டுமின்றி இந்த போருக்கு மூல காரணமாக விளங்கிய இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸின் சில பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் விரும்புகிறது. ஆனால் இஸ்ரேல் இதை முழுமையாக ஏற்கவில்லை என தகவல்கள் கூறுவதால் சிக்கல்கள் நிலவுகின்றன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios