அபசகுன ஆலிவாயனே சொல்லிட்டார்... கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதாம்... அப்பாடாாா..!
கொரோனா தொடங்கியதில் இருந்து அபசகுனமாகவும், அவ நம்பிக்கையாகவும் பேசி வந்த உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச்செயலர் தற்போது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடங்கியதில் இருந்து அபசகுனமாகவும், அவ நம்பிக்கையாகவும் பேசி வந்த உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச்செயலர் தற்போது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.
கொரோனா சீனாவில் வீரியமாக உருவான போதே உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரிக்கை தவறியதால் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. தற்போது வரை உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.34 லட்சத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்” என கூறினார்.
மேலும், கொரோனா தடுப்பூசி வினியோக நெரிசலில் ஏழைகளையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது என கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதன் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டி உள்ளது. இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது என கூறினார்.
மேலும், உலக சுகாதார நிறுவனத்தின், 'ஆக்ட் - ஆக்சிலரேட்டர்' திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நாடுகளுக்கும் சீராக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.