பெண்களுக்கு பில்லி-சூனியம் வைத்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய நர்ஸ்!
பில்லி - சூனியம் வைத்து பெண்களை வசியப்படுத்தி பாலியல் தொழிலுக்காக வெளிநாடு கடத்திய லண்டனைச் சேர்ந்த நர்சுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்தவர் ஜோசப்பின் இயாமு (53). இவர் அங்கு நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மந்திரவாதி ஒருவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. அந்த
மந்திரவாதி மூலம், பெண்களை வசியம் செய்து பாலியல் தொழிலுக்கு கடத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
நைஜீரியாவைச் சேர்ந்த 5 பெண்களை தன் வலையில் விழ வைத்த இயாமு, மந்திரவாதி நடத்திய மாந்திரீக சடங்கில் பங்கேற்க வைத்துள்ளார். மாந்திரீக
பூஜையின்போது கோழியின் இதயத்தை சாப்பிட வைத்தும், புழுக்களுடன் கூடிய இரத்ததை குடிக்க செய்தும், பிளேடால் தங்கள் உடல்களை கீறுவது என மிக
கொடூரமான சடங்குகளை கட்டாயப்படுத்தி செய்ய வைத்துள்ளார்.
இந்த மாந்த்ரீக சடங்குகளுக்குப் பிறகு அந்த பெண்கள் பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டுக்கு கடத்தியுள்ளார். ஜெர்மனிக்கு அனுப்பப்பட்ட அந்த பெண்கள்,
தப்பி ஓடிவிடக் கூடாது என்றும் போலீசாரிடம் சொல்லிவிடக் கூடாது என்றும் மிரட்டி அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளார் இயாமு.
பில்லி - சூனியம் செய்து பெண்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த போலீசார், இயாமுவை கடந்த சில
தினமாதங்களுக்கு முன் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இயாமு குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் இயாமுக்கு 14
ஆண்டுகள் சிறை தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது.