ரூ.9000 கோடி வங்கியில் கடன் வாங்கி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டுவரும் வழக்கில் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்.

 

கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜயமல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் எனத் தெரிகிறது. 

இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜராகிறார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பதற்கான இடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி பார்வையிடுகிறார்.

முன்னதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன், ஆதார்டு சிறையில் மல்லையாவுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறை அறையை வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவருக்கு தேவையான வசதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.