பாகிஸ்தானில் காரில் ஜன்னல் வழியாக இயற்கையை ரசிக்கும் சிங்கம்.. வீடியோ வைரல்!

கார்களின் பின் இருக்கைகளில் நாய்கள் நடமாடுவது வழக்கம். இருப்பினும், பாகிஸ்தானில் மற்றொரு சவால் உள்ளது. காரில் சிங்கக்குட்டி ஒன்று அமர்ந்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

video shows lion cub sitting in backseat of car in pakistan video viral in tamil mks

பொதுவாகவே, கார்களின் பின் இருக்கையில் சிறிய நாய்க்குட்டிகள் சுற்றித் திரிவது வழக்கம். மேலும் நாய்கள் காரின் கண்ணாடி வழியாக இயற்கையை ரசிக்கும் காட்சியை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம். இருப்பினும் சில நேரங்களில், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், எல்லா செல்லப்பிராணிகளையும் கூட கூட்டிச் செல்ல முடியாது. இதில் நாய் மட்டும் விதிவிலக்கு. அது தன் வீட்டாருடன் எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் சின்னஞ்சிறு சிறுத்தை குட்டிகள், புலிக்குட்டிகள், சிங்கக்குட்டிகள் போன்றவற்றைப் பார்க்கும் போது, ​​அவற்றை வளர்த்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ணுவோம். இருப்பினும், அது சாத்தியமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், தற்போது சிங்கத்தையும் காரில் கூட்டிட்டு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த அபூர்வ காட்சி பாகிஸ்தானில்  பதிவாகியுள்ளது. 

இதையும் படிங்க:  சிங்கம் மாமிசங்கள் மட்டும் தான் சாப்பிடும்னு யார் சொன்னது? இந்த வைரல் வீடியோவை பாருங்க..

பாகிஸ்தானில், சிங்கக் குட்டி ஒன்று காரின் பின் இருக்கையில் தனது குடும்பப் பையனுடன் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த சிங்கக் குட்டி காரின் கண்ணாடி வழியாக பார்த்தவாறு காணப்படுகிறது. சிக்னலில் கார் நின்று கொண்டிருந்தபோது,அருகில் இருந்த கார் இந்த வீடியோவை எடுத்தது. சிங்கக் குட்டியின் அருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான்.

இதையும் படிங்க:  SA vs IND 1st Test:என்னா ஒரு சிரிப்பு: தென் ஆப்பிரிக்கா சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த மகிழ்ச்சியில் சுப்மன் கில்

அவனிடம்  அருகில், காரில் இருந்தவர்கள், "இதற்கு பெயர் என்ன?" என்று கேள்வி கேட்டனர். வீடியோவில் அந்த பையன் சொன்ன பதில் கேட்டால், சில வருடங்களுக்கு முன் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற "The Lion King" திரைப்படம் தான் உடனே நினைவுக்கு வரும். ஏனெனில், பாகிஸ்தானை சேர்ந்த இந்த சிங்கக்குட்டியின் பெயர் முஃபாசா. அதன் வயது எட்டு மாதங்கள். மேலும், பாகிஸ்தானில் காணப்படும் இந்த முஃபாசா சிங்கக் குட்டியின் காணொளியிக்கு The Lion King படத்தில் இடம்பெற்ற ‘hakuna matata’ இந்தப் பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உட்பட அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்த பாடல் இது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த காணொளி, பதிவிட்ட சிறிது நேரத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. "Meet Mufasa at Red Light Signal" என்று hashtag உடன் கொடுக்கப்பட்டது. பலரும் இந்த வீடியோவை  விரும்பி பார்த்தனர். மேலும் பலர் தங்கள் கருத்துக்களை தெவித்துவருகின்றனர். "இது செல்லப்பிள்ளை அல்ல, அதை விட்டு விடுங்கள்" என்ற அறிவுரையையும் கொடுத்தனர். ஒருவர், “வன விலங்குகள் தங்கள் இயல்பை மறப்பது துரதிர்ஷ்டவசமானது. மனிதன் சிந்திக்க மறந்தான் போலும்.' பலர் கேட்கிறார்கள், “இது எப்படி சாத்தியம்? இது எப்படி அனுமதிக்கப்படுகிறது?' என்ற கேள்வியை கேட்கிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios