உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அமெரிக்காவில் 270 என்ற தேர்வாளர் வாக்குகளைப் பெறுபவரே அமெரிக்க அதிபராக முடியும். 

அந்தவகையில், 273 வாக்குகளை பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசுக்கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தான் வெற்றி பெற்றுள்ள அமெரிக்க மக்களுக்கு கூறியுள்ள செய்தி:

அமெரிக்க மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் கமலா ஹாரிஸை துணை அதிபராக தேர்ந்தெடுத்ததை நான் கௌரவமாக கருதுகிறேன். இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல தடைகளை எதிர்கொண்ட நிலையில், எனக்கு சாதனை எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர் அமெரிக்க மக்கள். ஜனநாயகம் என்பது அமெரிக்கர்களின் இதயத்தில் ஆழமாக துடிக்கிறது என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.

கோபம் மற்றும் கடுமையான சொல்லாட்சியையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒரு தேசமாக ஒன்றிணைய வேண்டிய நேரமிது. அமெரிக்கா ஒன்றிணைய மற்றும் அமெரிக்காவை குணமடைய வைக்க வேண்டிய நேரமிது. நம்மால் ஒன்றிணைந்து சாதிக்க முடியாதது எதுவும்   இல்லை என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.