Asianet News TamilAsianet News Tamil

'யார் பெரிய தல... ஆயுத பலப்போட்டியில் அமெரிக்கா...ரஷ்யா...! சர்வதேச நாடுகள் பதற்றம்...!

அமெரிக்க அணு ஆயுத சோதணையில் இறங்கியிருப்பது ரஷ்யாவை அவமதிக்கும் செயல்,  இதை  ரஷ்யா ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று  கூறியுள்ளார். அத்துடன் அதிக பொருட்செலவிட்டு ஆயுத போட்டியில் ஈடுபடுவதில் ரஷ்யாவுக்கு  எப்போதும்  உடன்பாடு இல்லை என்றாலும்,  நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை தயக்க மின்றி செய்வோம் , அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் புதியரக ஏவுகணை சோதனைக்கு தயாராகும்படியும்  அந்நாட்டு ராணுவத்திற்கு புடின் உத்தவிட்டுள்ளார்.

usa and russia ego clash
Author
Rusia, First Published Aug 24, 2019, 4:35 PM IST

ஏவுகணை சோதனைக்கு தயாராகும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு  சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவின் அடாவடித்தனமே அதற்கு காரணம் என தகவல்கள் காட்டுத்தீபோல் பரவிவருகிறது.usa and russia ego clash

உலக நாடுகளில்  எல்லா நாடுகளுக்கும் தலையாக விளங்கும் நாடுகள் எது என்றால்,  ஒன்று அமெரிக்க மற்றொன்று ரஷ்யா என்று அனைவரும் சொல்வர். அந்தளவிற்கு இந்த இரு நாடுகளும் அறிவியல் கண்டுபிடிப்பானாலும் சரி, ராணுவ பலமானாலும் சரி  ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் அல்ல. எந்தத்துறையாக இருந்தாலும்  போட்டிப்போட்டுக்கொண்டு செயல்படுவதில் இவர்கள் எமகாதகர்கள். அசூர பலமிக்க தங்களுக்குள்  ராணுவ நடவடிக்கைகளை வரன்முறை செய்துகொள்வதற்க்காக இந்த இரண்டு நாடுகளுமே கடந்த 1987 ஆம் ஆண்டு  அதி ரக ஏவுகணை தடை ஒப்பந்தத்தை செய்துகொண்டனர்.  usa and russia ego clash

அதாவது,  500 கிலோமீட்டர் முதல் 5.500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை இரு நாடுகளும் தாயாரிக்க கூடாது என்பது தான் அந்த ஒப்பந்தம் .  இந்த ஒப்பந்தத்தை இதுநாள் வரை இரு நாடுகளிம் கடைபிடித்துவந்த நிலையில்  திடீரென அமெரிக்க அந்த ஒப்பந்த த்தை தூக்கி எறிந்துள்ளது. அதாவது  500 கிலே மீட்டர் தூரம் சென்று தாக்கும் டொமாஹக் என்ற புதிய ரக ஏவுகணையை ஒன்றை தயாரித்து லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள சான் நிகோலஸ் தீவில்  சோதனை நடத்த உள்ளதாக  அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.    அமெரிக்காவின் இந்த அறிவப்புக்கு கேட்டு கொந்தளித்த ரஷ்யா அமெரிக்காவுக்கு  தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.  usa and russia ego clash

இது குறித்து பேசிய  ரஷ்ய அதிபர் புடின், இருநாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க அணு ஆயுத சோதணையில் இறங்கியிருப்பது ரஷ்யாவை அவமதிக்கும் செயல்,  இதை  ரஷ்யா ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று  கூறியுள்ளார். அத்துடன் அதிக பொருட்செலவிட்டு ஆயுத போட்டியில் ஈடுபடுவதில் ரஷ்யாவுக்கு  எப்போதும்  உடன்பாடு இல்லை என்றாலும்,  நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை தயக்க மின்றி செய்வோம் , அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் புதியரக ஏவுகணை சோதனைக்கு தயாராகும்படியும்  அந்நாட்டு ராணுவத்திற்கு புடின் உத்தவிட்டுள்ளார். இரு நாடுகளின் இந்த ஏவுகணை போட்டியால் உலகநாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios