பாகிஸ்தான் ஏற்கனவே எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தியாவை அவதூறு செய்யும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்தியா, பாகிஸ்தானில் பலூச் போராளிகளுக்கு நிதி வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

உலகில் நம்பவே முடியாத நாடு ஒன்று என்றால் அது அமெரிக்கா. எதிரிகளை விட, நண்பர்களுக்கு நரித்தனம் செய்தவதில் அசராத நாடு. இதற்காக வெள்ளை மாளிகை நடத்தும் இழிவான செயல்கள் உலகம் அறிந்ததே. ஜனநாயகத்தின் சாம்பியன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா, பாகிஸ்தானின் இராணுவத் தலைமையை கட்டிப்பிடித்து ‘உம்மா’ கொடுத்து வருகிறது. (மவுத் கிஸ்ஸான்னு கேட்டுடக்கூடாது.. ஆமா?)

அமெரிக்க அதிபர் டிரம்ப், பயங்கரவாதத்தின் முகமான பாகிஸ்தானின் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீருடன் மதிய உணவு அருந்தி வருகிறார். இதனால் பாகிஸ்தானின் கைப்பாவை ஜனநாயக அரசாக அமெரிக்கா மாறிவிட்டது. சமீபத்தில், டிரம்ப் நிர்வாகம் முனீர் உத்தரவின் பேரில் இரண்டு பலூச் அமைப்புகளை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இத்தனைக்கும் பலூச் அமைப்புக்கும், அமெரிக்காவும் காத தூரம். துரும்பளவுகூட, எந்தத் தொடர்பும் இல்லை.

இந்நிலையில், பலூச் பிரச்சினை தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் எந்த நேரத்திலும் இந்தியாவின் மீது சேற்றை வீசலாம் என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும், இந்தியா மீது இந்த விவகாரத்தில் எந்தக் குற்றச்சாட்டுகளையும் திணிக்க முடியாது என்பதும், அவர்களின் பொய்கள் இந்தியாவின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதும் உறுதி. ஆனால், கனடாவில் காலிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவின் இதேபோன்ற மலிவான உத்தி இந்தியாவுடனான உறவைக் கெடுத்ததை நாம் பார்த்திருக்கிறோம். 

பின்னர் அமெரிக்கா அந்த வழியிலிருந்து விலகிச் சென்றது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர் தனது பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பே கனடாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

பாகிஸ்தான் ஏற்கனவே எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தியாவை அவதூறு செய்யும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இந்தியா, பாகிஸ்தானில் பலூச் போராளிகளுக்கு நிதி வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், மஜீத் படைப்பிரிவு மீதான அமெரிக்க வெளியுறவுத்துறையின் தடை, இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்த பாகிஸ்தானுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இப்போது இந்த விஷயத்தை மேலும் சர்வதேசமயமாக்க முயற்சிக்கிறது. அந்த வகையில், அமெரிக்கா எந்த நேரத்திலும், பாகிஸ்தானுடன் இதற்கு உடன்படலாம் என்ற அச்சம் உள்ளது.

இதேபோன்ற குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தாவையும் அமெரிக்கா கைது செய்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதியும், அந்நாட்டின் குடியுரிமை பெர்ற குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல நிகில் குப்தா சதி செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இது தவிர, முன்னாள் இந்திய அரசு அதிகாரி விகாஸ் யாதவும் இந்த சதியில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியது. 

மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சில தகவல்களை வழங்கியது அமெரிக்காதான். அதன் அடிப்படையில் இந்தியா இந்தக் கொலையில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனாலும், தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று ட்ரூடோ ஒப்புக்கொண்டார்.

டிரம்ப் அதிபராவதற்கு பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கணிக்க முடியாதவராக மாறிவிட்டார் என்று பல முக்கிய நிபுணர்கள் நம்புகின்றனர். ஒரு நாட்டைப் பொறுத்தவரை டிரம்ப் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. சீனா விஷயத்தில் டிரம்ப் எடுத்த முடிவை உலகம் முழுவதும் பார்த்திருக்கிறது. சீனாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். 

ஆனால், இன்று சீனாவுக்கு முன்பாக டிரம்ப் சரணடைந்து விட்டார். மறுபுறம், இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும், சீனாவுக்கு எதிரான அதன் முக்கிய ஆயுதமாகவும் இருந்த இந்தியா, டிரம்பின் இரண்டாம் நிலை வரிகளை எதிர்கொள்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானை மகிழ்விக்க டிரம்ப் எந்த நேரத்திலும் பலூச் போராளிகளை இந்தியாவுடன் சேர்த்து முடிச்சுப்போடும் சாத்தியம் ஏற்படலாம் என்பதை நிராகரிக்க முடியாது.