திடீரென்று பச்சை நிறமாக மாறிய வானம்.. என்னாச்சு..? பதறி அடித்து ஓடிய மக்கள்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ !!

அமெரிக்காவில் தெற்கு டெகோடா மாகாணத்தில் சக்திவாய்ந்த புயல் கடந்து சென்ற பின், வானம் முழுவதும் பச்சை நிறமாக மாறி காட்சி அளித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள்,வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

US storm turns sky green in various states

அமெரிக்காவில் உள்ள டகோடா மாகாணத்தில் தெற்கு பகுதியில் டெரெகோ எனும் சக்திவாய்ந்த புயல் வீசியது. இதனால் அப்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியுள்ளது. மேலும் மணிக்கு 99 மைல் வேகத்தில் இந்த புயல் கடந்து சென்றுள்ளதாக அந்த மாகாணத்தின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

US storm turns sky green in various states

சமீபத்தில் கூட அப்பகுதியில் இரண்டு புயல்கள் தாக்கியுள்ளன. ஆனால் தற்போது வானம் பச்சை நிறமாக மாறியுள்ளது அப்பகுதி மக்களிடையே வியப்படை ஏற்படுத்தியுள்ளது.

US storm turns sky green in various states

புயல் கடந்து சென்ற பின்பு, அப்பகுதியில் வானம் பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனை கண்ட ஆச்சரியமடைந்த மக்கள், தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரிந்துள்ளனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து தேசிய வானிலை சேவை (NWS) ஆய்வாளர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

US storm turns sky green in various states

அதன்படி,  சூரியனின் சிவப்பு ஒளிக் கதிர்கள் புயலில் உள்ள நீர் அல்லது பனியுடன் சேர்ந்து,  இடியுடன் கூடிய மேகங்கள் பச்சை நிறத்தில் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

US storm turns sky green in various states

இதனால் அப்பகுதியில் புயல் கடந்து சென்ற பின், சூரியனின் சிவப்பு கதிர்கள் பனி அல்லது நீருடன் சேர்ந்த் இவ்வாறு காட்சியளித்துள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios