அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்

US Presidential Election 2024 Donald Trump Leads Republican Party Candidate smp

அமெரிக்க அதிபராக இருக்கும் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளே பிரதான கட்சிகள். அமெரிக்க நாட்டு முறைப்படி, அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போதைய நிலவரப்படி, 91 பிரதிநிதிகளின் ஆதரவுடன் அவர் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக டீன் பிலிப்ஸ் உள்ளார்.

அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர். ஆனால், பலரும் பின்னடைவை சந்தித்ததையடுத்து, டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹேலி ஆகிய இருவர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். இதில், டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

'நான் மலாலா அல்ல.. என் நாட்டில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' - UK பாராளுமன்ற கட்டிடத்தை அதிரவிட்ட யானா மிர்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். தெற்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அம்மாகாணத்தில் மேலும் 6 பிரதிநிதிகளின் ஆதரவு அவருக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 107 பிரதிநிதிகளின் ஆதரவுடன் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios