அமெரிக்காவில் காலை பதித்தார் மோடி; சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அலறவிட்ட ஜோ பைடன்!!
கலிபோர்னியாவில் ஜனநாயகக் கட்சியின் நன்கொடையாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை "சர்வாதிகாரி'' என்று குறிப்பிட்டார்.
கலிபோர்னியாவில் அதிபர் ஜோ பைடன் நன்கொடையாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது ஆவேசமடைந்த ஜோ சீனாவை கண்டித்தார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பறந்த சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதை குறிப்பிட்டு பேசிய அவர் சீனாவை கடுமையாக எச்சரித்தார்.
''அமெரிக்காவில் நான் இரண்டு கார்கள் நிறைய ஆயுதங்களை வைத்து இருந்தேன். இது தெரியாமல் அமெரிக்காவை உளவு பார்க்க ஜி ஜின்பிங் அனுப்பி இருந்த உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தினேன். இதனால் ஜி ஜின்பிங்கிற்கு என் மீது கோபம். அதுதான் சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் ஜி ஜின்பிங்கிற்கு நெருடலாக இருந்து இருக்கிறது. சீனா உண்மையிலேயே பொருளாதார சிக்கலில் உள்ளது.
நம்முடைய பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. எனவே நம்முடன் பொருளாதார கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜி ஜின்பிங் கருதுகிறார். பிளிங்கன் தனது பீஜிங் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நல்ல இணைக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு வந்துள்ளார். இது பிரதிபலிக்க நாட்கள் எடுக்கும்'' என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான மோதலை தவிர்க்க வேண்டும் என்று முயற்சித்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் அவை தோற்றுவிடுகின்றன. உலக நாடுகளில் இன்று மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்குள் நம்பர் ஒன் யார் என்ற போட்டியில் உள்ளன. மேலும், ஆசிய நாடுகளை சீனா தனது வலையில் கொண்டு வருவது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது. எனவே, ஆசிய நாடுகளை அரவணைத்து செல்லும் நிலையில் அமெரிக்காவும் இருக்கிறது.
'நான் மோடி ரசிகன்..' பிரதமர் மோடியை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்
சீனாவுடனான உறவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கடந்த திங்கள் கிழமைதான் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிளிங்கனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தனியாக சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பை ஜி ஜின்பிங் அங்கீகரித்து இருந்தார். உலகளாவிய இடையூறுகளை தவிர்க்க இருநாடுகளும் எவ்வாறு உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சந்திப்பில் விவாதித்தாக தெரிய வந்துள்ளது.
இரு தரப்பினரும் ஸ்திரத்தன்மைக்கான தங்களது விருப்பங்களைவெளிப்படுத்தி இருந்தனர். ஆனாலும், சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து இருப்பதால், ராணுவம் தொடர்பான இருதரப்பு தொடர்புகளுக்கு சீனா ஒப்புக் கொள்ளவில்லை. சீனா, அமெரிக்கா இடையே பல்வேறு நிலைகளில் சிக்கல்கள், முடக்கம் நீடித்து வருகிறது. தைவான், வர்த்தகம், சீனாவின் சிப் தொழிற்சாலை, மனித உரிமை மீறல், உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
நேற்று நன்கொடை திரட்டும் நிகழ்வில் மட்டும் ஜோ பைடன் கோபமாக பேசவில்லை. கடந்தாண்டும், ரஷ்யாவுக்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். ஆர்மகெடன் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்ற ரஷ்யாவின் அறிவிப்பை அடுத்து அந்த நாட்டுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.