Asianet News TamilAsianet News Tamil

கிஸ் அடித்து பெண்ணை காருக்குள் ஏற்றி கசமுசா: போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

முத்தம் கொடுத்து பெண் ஒருவரை தனது ரோந்து காருக்குள் ஏற்றி கசமுசா செய்த போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

US Police officer Suspended for kissing woman and  joining her in the back of his car smp
Author
First Published Sep 7, 2023, 4:18 PM IST

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு முத்தமிட்டு, அப்பெண்ணை தனது ரோந்து காருக்குள் ஏற்றி அவருடன் கசமுசாவில் ஈடுபட்ட போலீஸ் ஆதிகாரியின் வீடியோ வெளியானதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்த போலீஸ் அதிகாரியின் பெயர் ஃபிரான்செஸ்கோ மார்லெட்.

பிரின்ஸ் ஜார்ஜ் கவுண்டி போலீஸ் அதிகாரியான ஃபிரான்செஸ்கோ மார்லெட், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பூங்காவிற்கு அருகே தனது ரோந்து வாகனத்திற்கு அருகில் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிடும் வீடியோ வெளியானது. பின்னர், அப்பெண் அந்த போலீஸ் அதிகாரியின் கையை பிடித்துக் கொண்டு அவரது ரோந்து வாகனத்தின் பின்புறத்தில் ஏறுகிறார். அவரைத் தொடர்ந்து, அந்த போலீஸ் அதிகரியும் காரின் பின்புறத்தில் ஏறும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

 

 

போலீஸ் அதிகாரியும், அப்பெண்ணும் சுமார் 40 நிமிடங்கள் காருக்குள் இருந்ததாகவும், அதன்பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து தனித்தனியாக சென்று விட்டதாகவும் அந்த வீடியோவை எடுத்தவர் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்செஸ்கோ மார்லெட்டுக்கும் அந்த வீடியோவில் உள்ள பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவானது டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, ஃபிரான்செஸ்கோ மார்லெட் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதுவரை அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

ஃபிரான்செஸ்கோ மார்லெட் சிக்கலில் சிக்குவது இது முதன்முறை அல்ல. தனது முன்னாள் காதலியின் குழந்தையை அடித்ததாக குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் ஒரு மாத காலம் ஊதியம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்! 1999 இல் நடந்த சம்பவத்தை போட்டு உடைத்த லாரி சின்கிளேர்!

Follow Us:
Download App:
  • android
  • ios