ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் மீது தடை… இந்தியாவிற்கு மட்டும் விலக்கு அளித்து அமெரிக்கா தீர்மானம்!!

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா சட்ட இயற்றியுள்ள நிலையில் அதிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

us has passed a resolution to exempt india from ban whom buying weapons from russia

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா சட்ட இயற்றியுள்ள நிலையில் அதிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கிரிமீயாவை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்து கொண்டதற்காகவும், 2016 ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காகவும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் வகையிலும் சட்டம் இயற்றியுள்ளது. இதனை மீறி ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கிய துருக்கி மீது கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நல்ல குடும்பம்ப்பா! 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்ற 76வயதான எலான் மஸ்க் தந்தை

us has passed a resolution to exempt india from ban whom buying weapons from russia

இதனிடையே, ரஷ்யாவிடம் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஐந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு இயந்திரங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுப்பதற்கு உதவியாக, தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது.

இதையும் படிங்க: பணக்காரராக இருக்க பிடிக்கவில்லை! சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளைக்கு வழங்கும் பில் கேட்ஸ்

us has passed a resolution to exempt india from ban whom buying weapons from russia

அந்த தீர்மானத்தில், சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் இந்தியாவுடன் அமெரிக்கா இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு ஒத்துழைப்பை பலப்படுத்த முயற்சி செய்யவும், சீன எல்லையில் இந்தியா தன்னை தற்காத்து கொள்ளவும் முயற்சி செய்து வருகிறேன். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியமானது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது பெருமை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எம்.பி ரோ கண்ணா கொண்டு வந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios