நடுவானில் திண்டாடிய அமெரிக்க போர் விமானம் திடீர் மாயம்!

விமானம் விபத்திற்குள்ளாக இருப்பதை அறிந்த விமானி உடனடியாக பாதுகாப்பாக அவசரகால வழி மூலம் வெளியேறினார் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

US F-35 Fighter Jet Goes Missing After Mid-Flight Emergency sgb

தெற்கு கரோலினாவில் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் போர் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென காணாமல் போனது. காணாமல் போன பல மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வடக்கு சார்லஸ்டன் பகுதியில் பறந்துகொண்டிருந்த F-35 லைட்னிங் II ஜெட் விமானம் திடீரென் பழுதானது. விமானம் விபத்திற்குள்ளாக இருப்பதை அறிந்த விமானி உடனடியாக பாதுகாப்பாக அவசரகால வழி மூலம் வெளியேறினார் என அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன், சார்லஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள இரண்டு ஏரிகளைச் சுற்றி உள்ள பகுதியில் விமானத்தைத் ஏடும் பணி நடைபெற்று வருகிறது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"F-35 விமானத்தைக் கண்டறிய உதவும் ஏதேனும் தகவல் உங்களிடம் இருந்தால், தயவு செய்து பாதுகாப்பு நடவடிக்கை மையத்தைத் தொடர்புகொள்ளவும்" என்று ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய உள்ளூர் தலைவர் நான்சி மேஸ், F-35 விமானம்  மாயமானது எப்படி என்றும் கண்காணிப்பு சாதனம் இல்லாமல் போனது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கணிகாணிப்புக் கருவி இல்லாமல் இப்போது பொதுமக்களிடம் உதவி கேட்பதா என்று அவர் விமர்சித்துள்ளார்.

லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த F-35 விமானங்கள் ஒவ்வொன்றும் சுமார் $80 மில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios