அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப்- 210 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், ஜோ பைடன் - 237 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நிறைவடைந்து வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக அமர முடியும். விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது  ஜோ பிடன் 223 வாக்குகளும், டிரம்ப் 204 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணமான டெக்சாஸ், புளோரிடா என 38 இடங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே ஓக்லஹாமா, கெண்டகி, இண்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விரிஜினியா போன்ற மாகாணங்களில் டிரம்ப் பெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.