நியூயார்க் மாகாணத்தில் மிக மிக மோசமான தோல்வியைத் டொனால்ட் டிரம்ப் தழுவியுள்ளார். நியூயார்க்கில் ஜோ பிடன் 76% வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் வெறும் 23% வாக்குகளே பெற்றுள்ளார்.

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் மிக மிக மோசமான தோல்வியைத் டொனால்ட் டிரம்ப் தழுவியுள்ளார்.  நியூயார்க்கில் ஜோ பிடன் 76% வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் வெறும் 23% வாக்குகளே பெற்றுள்ளார். நியூயார்க்கில் ஜோ பிடன் பெற்ற வாக்குகள் 10,06,362,  டிரம்ப் 3,11,122 மிக குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். தற்போது நிலவரப்படி ஜோ பிடன் 131 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 108 இடங்கள் பெற்றுள்ளார்.