Asianet News TamilAsianet News Tamil

கிரீன் கார்டுவிண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு... அமெரிக்க கமிஷன் முக்கிய முடிவு...!

இந்த திட்டத்தை செயல்படுத்தி கிரீன் கார்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைந்து முடிவு எடுக்க பரிந்துரை வழங்கி உள்ளது. 

US commission votes to process all green card applications within 6 months
Author
India, First Published May 17, 2022, 11:15 AM IST

அமெரிக்காவில் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்தோருக்கு ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யக் கோரும் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அதிபர் ஆலோசனை கமிஷன் முடிவு செய்துள்ளது. கிரீன் கார்டு வைத்திருப்போர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடியும். 

ஆசிய அமெரிக்கர்கள், ஹூவாய் பூர்வீகம் கொண்டவர்கள் மற்றும் பசிபிக் தீவு பூர்வீகத்தினர் எளிமையாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வழிவகை செய்யும் வகையில் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் சட்டமாக்கப்பட்டால் நீண்ட காலமாக அமெரிக்க நிரந்தர குடியுரிமை கோரி காத்திருப்போருக்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் நிலை ஏற்படும். 

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற PACAANHPI சந்திப்பில் இந்திய பூர்விகம் கொண்ட அமெரிக்க சமுதாய தலைவர் அஜய் ஜெயின் புட்டோரியா இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முன்மொழிந்தார். இவரது திட்டத்திற்கு 25 கமிஷனர்களும் உடனடியாக ஒப்புதல் அளித்தனர். மேலும் கமிஷன் சார்பில் இந்த திட்டத்தை செயல்படுத்தி கிரீன் கார்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைந்து முடிவு எடுக்க அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது. 

விண்ணப்பம் பரிசீலனை:

கிரீன் கார்டு விண்ணப்பத்தின் பரிசீலனை சார்ந்த அனைத்து வழிமுறைகள், DACA புதுப்பித்தல்கள் மற்றும் இதர கிரீன் கார்டு விண்ணப்பங்களை ஆறு மாதங்களுக்குள் விசாரணை செய்து, விண்ணப்பித்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பத்திற்கான சட்டப்பூர்வ முடிவுகளை வெளியிடவும் கமிஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் ஆகஸ்ட் 2022 முதல் கிரீன் கார்டு விண்ணப்ப நேர்காணல்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் எண்ணிக்கையை 100 சதவீதம் அதிகப்படுத்த கமிஷன் பரிந்துரை வழங்கி உள்ளது. 

“இதை அடுத்து கிரீன் கார்டு விசா நேர்காணல்கள், விசா பரிசீலனை காலம் உள்ளிட்டவை அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்,” என கமிஷன் தெரிவித்து உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios