Nashville |அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கி சூடு.. குழந்தைகள் உட்பட 6 பேர் பலி - பெண்ணை சுட்டுக்கொன்ற காவல்துறை
அமெரிக்காவில் நாஷ்வில் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டென்னசி, நாஷ்வில்லியில் உள்ள ரீஸ் பைட்டிரியன் சர்ச் கான்வென்ட் உள்ளது. இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவரை காவல்துறை கொன்றது. தாக்குதல் நடத்தியவர் டீனேஜ் வயதுடைய பெண் எனத் தெரிகிறது என்று போலீஸார் தெரிவித்தனர். பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் வருவதை அதிகாரிகள் கேட்டதாக மெட்ரோபொலிட்டன் நாஷ்வில்லி காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் டான் ஆரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் குறைந்தது இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது என்று ஆரோன் கூறினார். ஐந்து பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவளைச் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகவும் அசாதாரணமானது. ஆராய்ச்சியாளர் டேவிட் ரீட்மேன் நிறுவிய இணையதளமான K-12 ஸ்கூல் ஷூட்டிங் டேட்டாபேஸின் படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை 89 பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வாண்டர்பில்ட்டில் உள்ள மன்ரோ கேரல் ஜூனியர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்த மூன்று மாணவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஜான் ஹவ்சர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதேபோல மற்ற மூவரும் இறந்துவிட்டதாகவும் அரசு தரப்பில் உறுதிசெய்யப்பட்டது. பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் இறந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்