கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு  உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் உலகிலேயே இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் கர்ப்பமடைந்து, எதிர் வரும் டிசம்பர் மாதம் வாக்கில்  2 கோடி குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அதிரிச்சி தகவல் வெளியிட்டுள்ளது . இது இந்திய சுகாதாரத்துறைக்கு மிகுந்த சவாலாக இருக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது,  கொரோனா வைரஸ் எதிரொலியாக அனைத்து நாடுகளிலும்  ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில்  அடுத்த 10 மாதங்களில்  உலகளவில் சுமார் பதினோரு கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது எனவும் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.   உலக அளவில் மே 10 அன்று கொண்டாடப்படும் அன்னையர் தினம்,  இந்த ஆண்டு முன்கூட்டியே  கொண்டாடப்பட்டது ,  அப்போது அதில் கலந்து கொண்ட யூனிசெஃப் நிறுவனத்தினர் இத்தகவலை தெரிவித்துள்ளனர் . 

மேலும் கூறிய அவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று பல்வேறு மருத்துவ சுகாதார சேவைகளை சீர்குலைத்து உள்ளது,   குறிப்பாக பெண்கள் குழந்தைகளுக்கு தேவையான சுகாதார சேவைகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளன  இதனால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பெண்கள் கர்ப்பம் அடையும் விகிதம் பன்மடங்கு அதிகரித்துள்ளது,  இதன் மூலம் மில்லியன் கணக்கான கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஆபத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்,  பொதுவாகவே உலகம் முழுவதும் அங்காங்கே ஊரடங்கு உத்தரவுகள் நடைமுறையில் இருப்பதால் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது இந்நிலையில் மில்லியன் கணக்கான பெண்கள் தேவையில்லாத கர்ப்பத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் , அதாவது பெண்களுக்கு தேவையான கருத்தடை சிகிச்சைகள் கருத்தனை மாத்திரைகள் அல்லது கருத்தடை உபகரணங்கள் கிடைப்பதில்  பெரும் தடை ஏற்பட்டுள்ளது . 

இதனால் பெண்கள் அனாவசியமான கர்ப்பத்திற்கு தள்ளப்படுகின்றனர் .  மில்லியன் கணக்கான தாய்மார்கள்  ஒரே நேரத்தில் பிரசவத்தை சந்திக்கும்போது நாட்டின் சுகாதாரத்துறை மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் ,  போதுமான மாத்திரைகள் முறையான சிகிச்சைகள் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது ,  மருத்துவத் துறை கடுமையான பணிச்சுமைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது,  அதே நேரத்தில்  சில மோசமான விபத்துக்களும் நேரிட வாய்ப்புள்ளது என யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது  .  மேலும் இது குறித்து தெரிவித்துள்ள யுனிசெப் ஒரு சராசரி முழுநேர கர்ப்பம் என்பது 9 மாதங்கள் அல்லது 39 முதல் 40 வாரங்கள் எனவே அதன் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 2020ஆம் ஆண்டில் 40 வாதத்திற்கு பின்னர் குழந்தை பிறப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரை இந்தியாவில் மட்டும் இரண்டு மில்லியன் குழந்தைகள் பிறக்கும்,

 

அதே நேரத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் 13.5 மில்லியன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்றும்  நைஜீரியாவில் 6.4 மில்லியன் குழந்தைகளும் ,  பாகிஸ்தானில் 5 மில்லியன் குழந்தைகளும் ,  இந்தோனேசியாவில் 4 மில்லியன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட கொரோனா நெருக்கடியில் அதிக அளவில் சிக்கித் தவிக்கும் பணக்கார நாடான அமெரிக்காவிலும் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரை 3.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் எனவும்   யூனிசெஃப் கணித்துள்ளது.