Asianet News TamilAsianet News Tamil

அமைதிப்புறா மண்டேலா தேசத்தில் கட்டுக்கடங்காத வன்முறை தீ.. கலங்கும் உலக நாடுகள்.

திங்கள்கிழமை இரவு ரமபோசா நாட்டு மக்கள் அமைதிகாக்க வேண்டும் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதும், விற்பதும் குற்றம் என்றும், எச்சரித்துள்ள அவர்,

Unbridled violent fire in peaceful Mandela nation ..  world nations Anxiety.
Author
Chennai, First Published Jul 14, 2021, 12:53 PM IST

தென்னாப்பிரிக்காவில் கொள்ளை தொடர்ந்தால்  நாட்டில் அடிப்படை உணவுப் பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் கலவரக்காரர்களை எச்சரித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் அங்கு கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னாப்ரிக்கா முழுவதும் கலவர தீ பரவியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. வன்முறையாளர்கள் வணிகவலாகங்களுக்கு உள்ளே புகுந்து, பொருட்களை கொள்ளைடித்தும், சூறையாடியும் வருகின்றனர். கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 

Unbridled violent fire in peaceful Mandela nation ..  world nations Anxiety.

இதேபோல் கொள்ளை தொடர்ந்தால், அடிப்படை உணவுப் பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர், ஆனால் அவசரகால நிலையை அறிவிக்க மறுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பிற்பகலுக்குள் சுமார் 200 க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு காலத்தில் நெல்சன் மண்டேலாவின் புகலிடமாக இருந்த தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய டவுன்ஷிப் - சோவெட்டோவில் உள்ள பல ஷாப்பிங் சென்டர்கள் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம்கள் உடைக்கப்பட்டுள்ளன, உணவகங்கள், ஆல்கஹால் விற்கும் கடைகள் மற்றும் துணிக்கடைகள் அனைத்தும் மோசமாக தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் டர்பனில் ஒரு ரத்த வங்கி சூறையாடப்பட்டுள்ளது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. 

Unbridled violent fire in peaceful Mandela nation ..  world nations Anxiety.

இந்நிலையில் காவல்துறையினரால் ஒரு சில கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொள்ளையில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாசுலு-நடாலில் கால்நடைகளும் திருடப்பட்டுள்ளன, சில பகுதிகளில் கலகக்காரர்களின் தாக்குதலால் அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் வருவதால் அமைதியின்மை அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்கள்கிழமை இரவு ரமபோசா, நாட்டு மக்கள் அமைதிகாக்க வேண்டும் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதும், விற்பதும் குற்றம் என்றும், எச்சரித்துள்ளார். 

Unbridled violent fire in peaceful Mandela nation ..  world nations Anxiety.

மேலும், வன்முறை, கொள்ளை சம்பவங்களை வீடியோக்காளாக காவல்துறையின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வருவதுடன், அமைதியை நிலைநாட்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழல் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios