கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாத சூழல் நீட்டிப்பது  மிகுந்த கவலை அளிப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குத்ரோஸ் தெரிவித்துள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,இந்நிலையில்  பல்வேறு நாடுகள் இதை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில்  ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குத்ரோஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,  அப்போது பேசிய அவர் ,  உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்,  தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவி வரும் நிலையில் ,  வளரும் நாடுகளிடையே  போதுமான ஒற்றுமை இல்லை இது தங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது . 

அதே நேரத்தில் வைரசால் சீர்குலைந்துள்ள  நாடுகளில்  மக்களின் உயிர்களை காப்பாற்றவும்,  பஞ்சத்தை தடுக்கவும்  வைரசின் வீரியத்தை குறைக்கவும்,  ஐக்கிய நாடுகள் சபை தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.தற்போது நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை அதனுடன் சிறிது நம்பிக்கை... அவ்வளவுதான் ,  நமக்கு எதிரில் இருக்கும்  ஒரே எதிரி கொரோனாதான்  அதற்கு எதிராக நாம்  ஒன்று திரள வேண்டும் ,  ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் உலக நாடுகள் மத்தியில் ஒற்றுமை இன்மை நிலவுகிறது.   உலகளவில்  ஒருவர் மாற்றி ஒருவர் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் வெறுப்புப் பிரச்சாரப் பேச்சுக்களை கைவிட்டு  மனித நேயத்துடன் பரஸ்பர மரியாதையுடனும் கொரோனா போர் களத்திற்கு முன்வரவேண்டுமென உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம் என அவர் கூறியுள்ளார். இன்னும்கூட கொரோனாவை எதிர்கொள்ள  உலகளவில் ஒரு தலைமை இல்லாத நிலை உள்ளது, தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.

 

அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது  என அழைப்பு விடுத்துள்ளோம் , அதில் 1 பில்லியன் டாலர் வரை நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் ,  மருத்துவ உபகரணங்கள்  மருந்துப் பொருட்கள் அனைத்தும் மலிவு விலையில்  கிடைக்க  ஐக்கிய நாடுகள் சபை முயற்ச்சி செய்து வருகிறது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர்  உலகளவில் பொருட்கள் விநியோகம் ஓரளவுக்கு சீரான நிலையை எட்டியுள்ளது,  மில்லியன் கணக்கான சோதனைக் கருவிகள் வென்டிலேட்டர்கள்  மற்றும்  முகக் கவசங்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை அடைந்துள்ளன , சுமார் 1200 மெட்ரிக் டன் சோதனை கருவிகளையும் அத்தியாவசிய மருந்து பொருட்களையும் ஆப்பிரிக்காவில் உள்ள 52 நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்,

  

தற்போது ஊரடங்கு நீடித்து வருவதால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது ,  பெண்கள் மீதான வன்முறை பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்றவற்றை தடுக்க ஐநா  மன்றம் விடுத்த அழைப்பை ஏற்று சுமார் 140 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுவரையில் 1.6 மில்லியன் குழந்தைகள் கல்வியை இழந்து ஆபத்தான கட்டத்தில் உள்ளனர் என எச்சரித்துள்ளோம்,  இந்த ஆண்டின் இறுதியில் சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் எச்சரித்துள்ளோம்,   தற்போது ஐநா மன்றம் எடுத்துள்ள முன் முயற்ச்சியின் விளைவாக ஏழை நாடுகளின் சுகாதாரத்திற்கு உதவுவதற்கும்,  உணவு பாதுகாப்பு மற்றும் கல்வி தடைபட்டுள்ள குழந்தைகளுக்கு என கிட்டதட்ட  57 நாடுகளில் 110 மில்லியனுக்கும் அதிகமான மக்களை எங்களின் உதவி சென்று சேர்ந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார் .