Asianet News TamilAsianet News Tamil

"சக்தி வாய்ந்த ஏவுகணைகள்" - வட கொரியா மீது 7வது பொருளாதார தடை விதித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில்!!

UN orders to economy ban on north korea
UN orders to economy ban on north korea
Author
First Published Aug 6, 2017, 10:33 AM IST


வடகொரியா மீது கடுமையான கடும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் ஐ.நா.வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து முதல் முறையாக வடகொரியா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது ஆகும்.  

அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த தீர்மானத்தில் வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே பேசும்போது, "சீனா மற்றும் ரஷ்யாவில் புதிய தடை முழுமையாக நிறைவேற்றப்படும் போது வடகொரியாவுக்கு சிக்கல் அதிகரிக்கும் என தெரிவித்தார். இந்த இரண்டு நாடுகளும் வடகொரியா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வியாபாரங்களை செய்து வருகிறது.   

ஜூலை 4 மற்றும் 28-ம் தேதிகளில் வடகொரியா சக்திவாயந்த ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்." என கூறினார்.

2006-ம் ஆண்டுக்குப் பின் வடகொரியா மீது கொண்டு வரப்படும் 7-வது தடை தீர்மானம் இது.

Follow Us:
Download App:
  • android
  • ios