Russia Ukraine War: 12 குழந்தைகளின் தாய் - நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி போரிட்ட வீரமங்கை மரணம்!

Russia Ukraine War: இவர் தனது தாய் நாட்டை பாதுகாக்க கடைசி வரை கடுமையாக போராடினார். இவர் ஒரு தேசிய ஹீரோ. இவர் எனக்கும் ஒரு ஹீரோ தான்

Ukrainian Woman Mother Of 12 Dies A Hero Defending Her Country

உக்ரேனை சேர்ந்த ஒல்கா செமிட்னோவா என்ற பெண்மணிக்கு வீரவணக்கத்துடன் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தாய் நாட்டுக்காக ரஷ்யாவை எதிர்த்து ஆயும் ஏந்தி சண்டையிட்டு வந்த ஒல்கா, ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். 

48 வயதான ஒல்கா உக்ரைனின் தெற்கு பகுதியில் னஉள்ள டொனெட் நகரில் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வந்த நிலையில், எதிரி நாட்டு தாக்குதலில் சிக்கிய உயிரிழந்தார். ஆரம்பத்திலேயே காயமுற்ற நிலையிலும், தன்னுடன் இருந்தவர்களை காப்பாற்ற இரத்தம் சிந்திய நிலையில் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய படைகளுடனான சண்டையின் ஒல்காவின் வயிற்றில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.

Ukrainian Woman Mother Of 12 Dies A Hero Defending Her Country

தொடர்ந்து அந்த பகுதியில் சண்டை நடைபெற்றுக் கொண்டு இருப்பதால், இவரின் உடல் அங்கிருந்து இதுவரை மீட்கப்படவில்லை. இதனால், ஆழ்ந்த துயரத்தில் ஒல்காவின் குடும்பத்தார் உடலை வாங்க காத்து கொண்டு இருக்கின்றனர். ஒல்கா செமிட்னோவா உயிரிழந்த இடத்தில் இருந்து சுமார் 241 கிலமீட்டர்கள் தொலைவில் உள்ள மர்ஹானெட்ஸ் எனும் பகுதியில் வசித்து வந்தார். 6 குழந்தைகை பெற்றெடுத்து தாயான ஒல்கா, ஆறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

"தனது இறுதி மூச்சு வரை வீரர்களை அவர் காப்பாற்றினார். அவர் மறைந்த இடத்தின் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது. அங்கு தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருவதால், எங்களால் எனது அம்மாவை அடக்கம் செய்ய முடியவில்லை," என ஒல்காவின் மகள் ஜூலியா தனியார் செய்து நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

Ukrainian Woman Mother Of 12 Dies A Hero Defending Her Country

முன்னதாக ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் "மதர் ஹீரோயின்" (Mother Heroine) எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. "ரஷ்ய வீரர்களுடன் சண்டையிடும் போது இவர் மிகக் தீவிரமாக செயல்பட்டார். இவரின் படை தப்பிக்க முடியாது என அறிந்துக் கொண்டு பின்பும், இவர் தனது தாய் நாட்டை பாதுகாக்க கடைசி வரை கடுமையாக போராடினார். இவர் ஒரு தேசிய ஹீரோ. இவர் எனக்கும் ஒரு ஹீரோ தான்," என உக்ரைன் நாட்டு உள்துறை ஆனையர் அண்டன் கிராகென்கோ தெரிவித்தார்.

இவரது மறைவு செய்தி கேட்டு பலரும் கவலையுற்ற போதிலும், இவரின் வீரதீர செயலை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த போரில் இதுவரை எத்தனை பேர் பலியாகி இருக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios