Asianet News TamilAsianet News Tamil

நாலாபுறமும் கடும் நெருக்கடி... வேறு வழியில்லாமல் சொன்னதை செய்து காட்டிய ஈரான் அதிபர்..!

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கு காரணம் முதலில் கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா ஆதாரத்துடன் கூறியது. 

Ukrainian airliner attack...Iran announces first arrests
Author
Iran, First Published Jan 15, 2020, 8:30 AM IST

ஈரானில் 176 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிலரை அந்நாட்டு போலீசார் முதல் முறையாக கைது செய்துள்ளனர். 

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கு காரணம் முதலில் கூறப்பட்டது. ஆனால் உக்ரைன் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா ஆதாரத்துடன் கூறியது. 

Ukrainian airliner attack...Iran announces first arrests

அதன் பிறகுதான் அமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இதற்கு கனடா, உக்ரைன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என அதிபர் ரவுகானி அறிவித்திருந்தார். 

Ukrainian airliner attack...Iran announces first arrests

இந்த விவகாரத்தில் 3 நாட்களாக மக்களிடம் உண்மையை மறைத்ததாக கூறி ஈரான் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், விமானத்தை வீழ்த்திய விவகாரத்தில் முதல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என விவரம் தெரியவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios