Russia Ukraine crisis: ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்... உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!!

ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ukraine wont surrender to russia says president zelensky

ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலை போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா இணையவழி தாக்குதலையும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைன் பகுதிகள் முழுவதிலும் வெடி குண்டுகள் மழை பொழிகிறது என்றே சொல்லலாம். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியிருக்கும் நிலையில்,  ரஷ்யாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று. போர் பதற்றம் என ஒரு மாதத்துக்கும் மேலாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

ukraine wont surrender to russia says president zelensky

தொடர்ந்து  உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா இணையவழி தாக்குதலையும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அடிபனியும்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும்  உக்ரைன் படைகள் துணிச்சலுடன் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள நடத்திய பதிலடியில், ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ukraine wont surrender to russia says president zelensky

இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இந்த நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக  தெரிவித்திருக்கிறார். மேலும் ரஷ்யாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க ஆயிதம் ஏந்த தயாராக இருக்கும் அனைத்து குடிமக்களும் முன்வர வேண்டும் என்றும், ரஷ்ய குடிமக்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருக்கிறார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios