Russia Ukraine crisis: விசா இலவசமாம்! யாராவது போறீங்களா!: உக்ரைன் அதிபர் அழைப்பு
எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் உதவ விரும்பினால், அவர்கள் உக்ரைன் வரலாம். அவர்களுக்கு இலவசமாக விசா தரப்படும் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் ரஷ்யாவுக்கு எதிராகப் போரில் உதவ விரும்பினால், அவர்கள் உக்ரைன் வரலாம். அவர்களுக்கு இலவசமாக விசா தரப்படும் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், வடமெரிக்க நாடுகள் அடங்கிய நேட்டோ படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, முதலில் எல்லையில் படைகளை நிறுத்தியது. பின்னர், கடந்த மாதம் 24ம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக போர் நீடித்துவருகிறது. இதுவரை பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பு நாடுகளும் சென்றபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் உக்ரைனுடன் ரஷ்யா போர் செய்துவருதையடுத்து,ரஷ்யா மீது ஐரோப்பியயூனியன் நாடுகள்,அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
போரைத் தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய ராணுவம், உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இன்று நடத்திய மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் வீசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர கொத்துக்குண்டுகள், வேக்கும் குண்டுகள் என தடை செய்யப்பட்ட மரண ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராகப் போராடவும் உதவும் எந்தநாட்டிலிந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம் அவர்களுக்கு விசா இலவசமாக வழங்கப்படும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று இரவு பிறப்பித்தார். அதில் “ ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவ எந்தநாட்டினரும் வரலாம். பாதுகாப்பு படையில் சேர்ந்து உக்ரைன் ராணுவத்துக்கு உதவலாம். அவர்களுக்கு தற்காலிகமாக விசா இலவசமாகத் தரப்படும். இந்த கொள்கை ரஷ்ய மக்களுக்குப் பொருந்தாது. இதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையில் சேர விரும்பும் மக்கள் அவர்களுக்குரிய தனிப்பட்ட கவசஉடை, ஹெல்மெட், ஆயுதங்களை எடுத்து வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது