Ukraine Russia War:முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா..அடுத்தடுத்த டார்கெட்டை கச்சிதமாக முடிக்கும் புதின்..
Ukraine Russia War: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தை ரஷ்யா படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனால் உக்ரைனுக்கு கடல்வழியாகக் கிடைக்கும் உதவிகள் இனி தடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா இராணுவம் தாக்குதலை தொடங்கியது. வான்வழி , தரைவழி மூலம் கடுமையான தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளது. குறிப்பாக தலைநகர் கீவ்யில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வந்தது. உக்ரைன் மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 10 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் விமானப்படை தளம், இராணுவ தளம், துறைமுக நகரம் உள்ளிட்டவை கைப்பற்றி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள் , மருத்துவமனைகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்களான கார்கீவ், கீவ், கெர்சன் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளது ரஷ்ய படை. ரஷ்யா உக்ரைன் மீது இணையத் தாக்குதலும் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் இணையச் சேவைகளை ரஷ்யா முடக்கியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் ஜாபோரிசியா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யப் படை, மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை சுற்றி வளைத்துள்ளது. இந்த நகரை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், உக்ரைனுக்கு கடல்வழியாகக் கிடைக்கும் உதவிகள் இனி தடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் க்ரீமியா, டான்பாஸில் இருந்து மரியுபோல் வழியாக தடையின்றி ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நூழையலாம்.
மரியுபோலைக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள், குறிப்பிட்ட சில மணி நேரம் வரை தாக்குதல் நடத்தப்படாது என்றும், அதைப் பயன்படுத்தி மரியுபோல், வொல்னோவாகா பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த நிலையில், ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் உக்ரைன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் நேட்டோவிடம் கோரிக்கை வைத்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. நேட்டோவின் இச்செயல் மூலம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ரஷ்யாவிற்கு பச்சை கொடி காட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
அதே வேளை, நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் விமானப் பாதுகாப்புக் காரணமாக உக்ரைன் வான்வழியில் பறக்க வேண்டாம் எனத் தடை விதித்துள்ளது அந்த அமைப்பு. நேட்டோவின் இந்த அறிவிப்பு உக்ரைன் மீது ரஷ்யா நேரடியாக ஆக்கிரமிப்பைத் தொடர அனுமதிக்கும் செயலாகவே இருக்கிறது என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டியுள்ளார்.
இதனிடையே ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 500 ஏவுகணைகள் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இருவேறு விதமான ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 ஏவுகணைகள் வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இதே நிலை நீடித்தால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையிலும், உக்ரைனில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறும் வகையில் தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பெலாரஸில் இந்த வார இறுதியில் ரஷ்யாவுடன் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Ukraine Russia War:இதுவரை 500 ஏவுகணைகளை வீசி தாக்குதல்..சுக்கு நூறான உக்ரைன்..பரிதவிக்கும் மக்கள்..