உக்ரைன் - ரஷ்யா இடையே மார்ச்.10ல் பேச்சுவார்த்தை.. துருக்கியின் அண்டாலியாவில் நடக்கும் என தகவல்!!

ரஷ்யா - உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ukraine Russia talks on march 10 in Antalya Turkey

ரஷ்யா- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது.

Ukraine Russia talks on march 10 in Antalya Turkey

இந்த நிலையில் தற்போது அடுத்த பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10 ஆம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெற்றது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி ரஷ்யா உருக்குலைத்த நிலையில் உக்ரைனும் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Ukraine Russia talks on march 10 in Antalya Turkey

உக்ரைன்-ரஷியா இடையே நடக்கும் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து போரை நிறுத்த பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபடியாக ரஷ்ய- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10 ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மிரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜே லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியின் கடற்கரை மாகாணமான அண்டலியாவில் சந்தித்துப் பேச ஒப்புக் கொண்டுள்ளனர். இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரடியாக சந்தித்துப் பேச உள்ளதால், போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios