Ukraine Russia War : இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு..
Ukraine Russia War : எங்களுக்கு எதிராக தெளிவான போர் திட்டங்களை உக்ரைன் வகுத்து வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Ukraine Russia War : உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது.
முதல் சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்தது. ரஷ்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று இரவு போர் நிறுத்தம் தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கபட்ட நிலையில், திடீரென்று அது ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே இன்று இரு நாடுகளும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உக்ரைனின் பெரு நகரங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று வருகிறது. இந்நிலையில் போரை கைவிட்டு திரும்பவில்லை என்றால் ரஷ்ய படைகள் முற்றிலும் அழிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது நடப்பது தேசபக்திக்கான போர் என்றும் நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் உக்ரைன் - ரஷ்யா போர் உச்சமடைந்துள்ள நிலையில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய இராணுவம் ஏராளமான போர்க்கப்பல்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடயே ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடந்து எதிர்த்து வரும் அமெரிக்கா, தனது வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடைவிதித்தது. இதற்கு பதிலடியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவிற்கு ராக்கேட் எஞ்சின் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
இதனிடையே எங்களுக்கு எதிராக தெளிவான போர் திட்டங்களை உக்ரைன் வகுத்து வருகிறது என்றும் உக்ரைனுடன் இன்று கட்டாயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் தப்பிச் செல்ல அந்நாட்டு அரசு மறுக்கிறது என்றும் ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.