Ukraine - Russia Crisis: மீண்டும் ஒரு அணு ஆயுத யுத்தமா..? புதின் திடீர் உத்தரவு.. அச்சத்தில் உலக நாடுகள்..
Ukraine - Russia Crisis: அணு ஆயுத தடுப்பு பிரிவினர் தயாராக நிலையில் இருக்க ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அணு ஆயுத பிரிவினருக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ukraine - Russia Crisis: அணு ஆயுத தடுப்பு பிரிவினர் தயாராக நிலையில் இருக்க ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அணு ஆயுத பிரிவினருக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன. உக்ரைனின் வடக்கு பகுதி முழுவதுமாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கார்கீவ் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படையினர் வசம் சென்றுள்ளது. இதனால் அந்நகர்களில் உள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் 4 நாட்களில் மட்டும் 1.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர் .மேலும் ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போலந்து , மால்டோவா,ஹங்கேரி, ரூமேனியா, சுலோவாக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்து வருவதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் மேலும் முன்னேறி வருவதற்கு ரஷ்ய படை முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அணு ஆயுத தடுப்பு பிரிவினர் தயார் நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையெ அணு ஆயுத தடுப்பு பிரிவினரை தயார் நிலையில் இருக்க புதின் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய புதின், "ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யா குறித்து நேட்டோ நாடுகள் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவுவதால், அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்றார். உக்ரைன் மீது போர் தொடுத்தன் மூலமாக உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா, தற்போது அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்குமாறு கூறியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.