Asianet News TamilAsianet News Tamil

Ukraine - Russia Crisis: தலைநகர் எங்கள் கட்டிப்பாட்டில் தான் உள்ளது..ரஷ்யாவுக்கு நிகரான நிற்கும் உக்ரைன்..

Ukraine - Russia Crisis:ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 
 

Ukraine - Russia Crisis updates
Author
Ukraine, First Published Feb 26, 2022, 6:01 PM IST

உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவமும் சரிக்கு சரியாக நின்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.அந்த நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன்,ரஷ்ய படைகள் இடையே கடுமையான சண்டை நீடிக்கிறது .இரு நாடுகளுக்கும் இடையே உக்கிரமடைந்துள்ள போரினால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன.

இருந்த போதிலும்,ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதலை, துணிச்சலுடன் உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இன்று 3வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தங்களுக்கு உதவுமாறு உலகத் தலைவர்களிடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார். 27 நாடுகளின் தலைவர்களிடம் பேசியதாகவும், ஆனால் யாருமே பதிலளிக்கவில்லை என்றும், ரஷ்யாவுக்கு எதிராக தனித்து விடப்பட்டிருப்பதாகவும் நேற்று அவர் உருக்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா உக்ரைனின் ராணுவ மையங்களை அழித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முக்கிய நகரங்களையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. முதல் நாளின் போதே 200க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், அச்சத்தில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்து வருவதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் கூறியது. ஆனால் உக்ரைன் அரசு அதனை முழுவதுமாக மறுத்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்களில் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கிறதோ நாட்டைப் பாதுகாக்கவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதம் வாங்கிக் கொள்ள உக்ரைன் அரசு அனுமதியளித்துள்ளது. அதிலும் குறிப்பாக 18-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அவ்வப்போது சமுக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டு மக்களிடம் பேசி வரும் அதிபர் ஜெலன்ஸ்கி. நான் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வந்ததிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு நான் கூறவில்லை.நான் இங்கே தான் இருப்பேன். எங்கேயும் ஓடிவிட மாட்டேன். எனக்கு ஆயுதங்கள் தான் தேவை. தப்பியோடும் பயணம் அல்ல என்று பேசியுள்ளார்.

எந்தச் சூழலில் நாட்டையும் நாட்டு மக்களையும் விட்டுக்கொடுக்க போவதில்லை. தீர்க்கமாக சொல்கிறேன். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் எங்கள் ஆயுதங்களையும் கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

தலைநகர் கீவை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக செய்தி வெளியாகவே அதையும் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். சற்று முன் வெளியிட்ட வீடியோவில் ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் திட்டத்தை தாங்கள் முறியடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாக அதிபர் வீடியோ மூலம் பேசியுள்ளார். நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க உக்ரைன் தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios