Ukraine - Russia Crisis: உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ்வை மீட்டுவிட்டோம்... அறிவித்தது உக்ரைன்!!

உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ukraine recaptured russian occupied kharkiv

உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது முழு ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்யா அதிபர் உத்தரவிட்டிருந்த நிலையில், உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நான்காவது நாளாக இன்று கடுமையாக தாக்கி வருகிறது. அப்போது, தலைநகர் கீவ்-ஐ ரஷ்ய படைகள் தொடர்ந்து நெருங்கி வருவதாக கூறப்பட்டது. ஆனால், இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ukraine recaptured russian occupied kharkiv

உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதற்குப் பதிலடியாக சம்பந்தப்பட்ட நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு தடைகளை அறிவித்து வருவதுடன் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைனை நான்கு திசைகளில் இருந்தும் தாக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது ஏவுகணைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் கிடங்குகள், எரிவாயுக் குழாய்களை தகர்க்கும் ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகளையும் பதம் பார்த்து வருகின்றன.

ukraine recaptured russian occupied kharkiv

இது மிருகத்தனமான செயல் என்று குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ரஷ்யா உக்ரைனில் நடத்தும் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. இதனிடையே தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாகவும் ரஷ்ய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது என்றும் கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios