Ukraine Helicopter Crash: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து - உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலியான சம்பவம்
உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்து தற்போது தனி நாடாக இருக்கும் உக்ரைன் திட்டமிட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எண்ணிய ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.
இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ஏறத்தாழ ஒரு வருடத்தை நெருங்கி விட்ட போதிலும் போர் தற்போது வரை நீடித்து வருகிறது.உக்ரைன் - ரஷ்யா இடையேயான சண்டையில் ரஷ்யாவின் கையே ஒங்கி இருந்தாலும் உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ரஷ்யாவுக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது கவனத்தை திருப்பியிருக்கும் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல்கள் மூலம் ஆக்கிரமித்து உள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகி இருப்பதால் உக்ரைனின் பல இடங்களும் இருளில் மூழ்கியுள்ளன. கார்கிவ், லிவி, இவனோ பிரான்கிவ்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரக் கட்டமைப்புகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே ஹெலிகாப்டர் வந்தது.
அப்போது திடீரென ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மழலையர் பள்ளி அருகே விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் உட்பட 16பேர் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!