ஐசியூ -வில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர்... செயற்கை சுவாசத்துடன் போராட்டமா?
பிரத்யேக மருத்துவக்குழு ஒன்று போரிஸ் ஜான்சனை கண்காணித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. சீனாவின் வுகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுழட்டி அடிக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திண்டாடி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என யாரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா அறிகுறியால் அவதிப்பட்ட போரிஸ் ஜான்சன், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதையும் படிங்க: “வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...!
இதையடுத்து அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, நேற்று இரவு ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு போரிஸ் ஜான்சன் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியான. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உலக தலைவர்கள் அனைவரும் போரிஸ் ஜான்சன் உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.
இதையும் படிங்க: மொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...!
பிரத்யேக மருத்துவக்குழு ஒன்று போரிஸ் ஜான்சனை கண்காணித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதை மறுத்துள்ள அவரது வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப், போரிஸ் ஜான்சன் சுயநினைவுடன் தான் இருப்பதாகவும், அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. ஆனால் வென்டிலேட்டரில் அனுமதிக்கப்படும் அளவிற்கு மோசமான நிலையில் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.